ஐபிஎல் 2024 மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், சன்ரைசர்ஸ் அணி புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் ஏலத்தின்போது 20.5 கோடி கொடுத்து எஸ்ஆர்ஹெச் அணி வாங்கியிருந்தது. அப்போதே, பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. அணிக்கு புதிய கேப்டன் தேவை என்ற அடிப்படையிலேயே எஸ்ஆர்ஹெச் அணி இவ்வளவு தொகை கொடுத்து பாட் கம்மின்ஸ்-ஐ வாங்கியது என்றும் கூறப்பட்டிருந்தது. ஏனென்றால் இவரது தலைமையில் தான் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகளை வென்றிருந்தது.
மேலும் படிக்க | விராட் கோலியின் இந்த 3 சாதனைகளை அசால்டாக முறியடிக்க போகும் ஜெய்ஸ்வால்!
இதற்கு முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்கிரம் இருந்தார். அவரது தலைமையில் கடந்த முறை எஸ்ஆர்ஹெச் அணி மிக மோசமாக விளையாடியது. 14 போட்டிகளில் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது. இதனால் அணி நிர்வாகம் அவர் மீது அதிருப்தியில் இருந்தது. ஐபிஎல் ஏலத்தில் இதனை சரி செய்யும் வகையில் பாட் கம்மின்ஸை இத்தனை கோடிகளை கொட்டி கொடுத்து வாங்கியது. அதேநேரத்தில் தென்னாப்பிரிக்க லீக்கில் சன்ரைசர்ஸ் அணிக்கு மார்கிரம் தான் கேப்டனாக இருக்கிறார். அவரது தலைமையில் இம்முறை வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், கேப்டன் எய்டன் மார்கிரம் மற்றும் வீரர்களை வெகுவாக புகழ்ந்தார். அதனால், ஐபிஎல் தொடரிலும் அவரே கேப்டனாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஐபிஎல் தொடர் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு கேப்டனாக இருக்கட்டும் என முடிவு எடுத்து இப்போது அறிவித்துள்ளது.
அதேபோல் மற்றொரு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் இம்முறை சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். ஐபிஎல் 2024 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அதன்பிறகு மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுடன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட உள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்க இருக்கிறது.
ஐபிஎல் 2024 சீசனுக்கான SRH அணி:
அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்விர் சிங், ஹென்ரிச் கிளாசென், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், டி. நடராஜன், அன்மோல்பிரீத் சிங், மயங்க் மார்கண்டே, உபேந்திர சிங் யாதவ், உம்ரான் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷாபாஸ் அகமது, டிராவிஸ் ஹெட், வனிந்து ஹசரங்கா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனத்கட், ஆகாஷ் சிங், ஜாதவேத் சுப்ரமணியன்.
மேலும் படிக்க | IPL 2024: சிஎஸ்கே ரசிகர்களுக்கு சோகமான செய்தி! கான்வே விளையாடுவது சந்தேகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ