திடீர் என்று டெஸ்ட் அணியில் இருந்து விலகிய ரோஹித் - காரணம் என்ன?

காயம் காரணமான ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இருந்து விலகிய நிலையில் புதிய துணை கேப்டனாக ராகுல் நியமிக்கபட்டுள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Dec 18, 2021, 05:01 PM IST
  • டி20 கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகி கொள்வதாக கோலி அறிவித்து இருந்த நிலையில் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் அவரை நீக்கியது பிசிசிஐ.
  • டெஸ்ட் அணி அணிவிப்பிற்கு சில மணி நேரங்கள் முன்பு மட்டுமே நான் கேப்டன் பதவியில் இருந்து நீக்க பட்டுள்ள விஷயம் எனக்கு தெரியவந்தது என்று கோலி குற்றம் சாட்டி இருந்தார்.
திடீர் என்று டெஸ்ட் அணியில் இருந்து விலகிய ரோஹித் - காரணம் என்ன? title=

இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.  இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.  அதில் இருந்தே இந்திய அணியில் கூச்சலும் குழப்பமும் நீடித்து வருகிறது.  டி20 கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகி கொள்வதாக கோலி அறிவித்து இருந்த நிலையில் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் அவரை நீக்கியது பிசிசிஐ.  புதிய டி20, ஒருநாள் அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.  கோலி டெஸ்ட் போட்டியின் கேப்டனாக தொடர்வார் என்று பிசிசிஐ கூறி இருந்தது.

ALSO READ | நான் கேப்டன் அல்ல என்பதை அவர்கள்தான் தீர்மானித்தார்கள் - விராட் கோலி

இது குறித்து கருத்து தெரிவித்த கோலி, தனக்கு சரியான முறையில் இது குறித்து விவாதிக்க படவில்லை.  டெஸ்ட் அணி அணிவிப்பிற்கு சில மணி நேரங்கள் முன்பு மட்டுமே நான் கேப்டன் பதவியில் இருந்து நீக்க பட்டுள்ள விஷயம் எனக்கு தெரியவந்தது.  அதற்க்கு முன்பு என்னிடம் யாரும் பேச வில்லை என்று கோலி குற்றம் சாட்டி இருந்தார்.  இது இந்திய கிரிக்கெட் அணியில் அனைவரது மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.  மேலும், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து கோலி விலக போகிறார் என்ற தகவலும் வெளிவந்தது.  

இது பொய்யான தகவல், நான் கண்டிப்பாக விளையாடுவேன்.  ரோஹித் தலைமையில் விளையாட எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார் கோலி.  இந்நிலையில் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு இருந்தார்.  தற்போது காயம் காரணமாக ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.  இதன் காரணாமாக மீண்டும் துணை கேப்டன் பதவி ரஹானேவிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது பிசிசிஐ.  டிசம்பர் 26 முதல் ஜனவரி 15ம் தேதி வரை நடைபெற உள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கு ராகுல் துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.  

இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, பிரியங்க் பஞ்சால், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாகே (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாகே (விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், எம்.டி. சிராஜ்

ALSO READ | இந்தியாவின் மிகவும் பலமிக்க கேப்டன் கோலி! ஏன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News