தோனியை கலாய்த்த KKR! தக்க பதிலடி கொடுத்த ஜடேஜா!

ட்விட்டரில் தோனியை கலாய்க்கும் படி பதிவு செய்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜடேஜா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Jan 9, 2022, 07:55 PM IST
  • ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் இன்று நடைபெற்றது.
  • ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களும் பேட்ஸ்மேனை சுற்றி நின்றனர்.
தோனியை கலாய்த்த KKR! தக்க பதிலடி கொடுத்த ஜடேஜா!  title=

ட்விட்டரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியை (Dhoni) கலாய்க்கும் விதமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ட்வீட் செய்திருந்தது.  இதற்கு ரவீந்திர ஜடேஜா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.  இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் இன்று நடைபெற்றது.  

msd

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இந்த போட்டியை டிராவில் முடித்தனர்.  ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று ஓவர்களுக்குள் மீதமிருந்த ஒரு விக்கெட்டை எடுத்தால்  ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறலாம் என்ற கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களும் பேட்ஸ்மேனை சுற்றி நின்றனர்.  

 

இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கௌதம் கம்பீர் கேப்டனாக இருந்தபோது ரைசிங் புனே அணிசார்பாக தோனி பேட்டிங் செய்யும் பொழுது, இதேபோல் அனைத்து வீரர்களையும் சுற்றி நிற்க வைத்தார்.  இந்த இரண்டு புகைப்படங்களையும் சேர்த்து "master stroke" என்று பதிவு செய்திருந்தனர்.  இதற்கு ட்வீட்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த ட்வீட்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா "இது பெரிய மைல்கல் அல்ல. வெறும் விளம்பரம் தான்" என்று பதில் அளித்துள்ளார்.  ஜடேஜாவின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொல்கத்தா அணி பதிவு செய்வது ட்வீட்-ஐ விட ரவிந்திர ஜடேஜாவின் ட்வீட்க்கு லைக் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. 

 

2016 மற்றும் 17 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டிருந்த போது தோனி ரைசிங் புனே சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.  அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு திரும்பியவுடன் அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்தார்.  சமீபத்தில் நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது.

ALSO READ | ஒரு பந்தில் 7 ரன்கள் அடித்த நியூஸிலாந்து அணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News