Ambani vs Amazon: ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்றப்போவது யார்?

ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்ற அம்பானி மற்றும் அமேசான் இடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 10, 2022, 11:59 AM IST
  • 2023 - 27 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மீடியா உரிமை
  • முகேஷ் அம்பானி - அமேசான் இடையே போட்டி
  • ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்றபோவது யார்?
Ambani vs Amazon: ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்றப்போவது யார்? title=

ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்ற டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி எண்டர்டெயின்மென்ட், கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய 10 கார்ப்ரேட் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் அம்பானி மற்றும் ஜெப் பெசோஸின் அமேசான் நிறுவனத்துக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் மீடியா உரிமை

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடராக மாறியுள்ளது ஐபிஎல். ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பில்லியன் கணக்கில் பணம் புழங்குகிறது. இதனால், ஐபிஎல் தொடரின் வர்த்தகம் உலகளவில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. ரசிகர்களும் அதிகரித்துள்ளதால், ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் இதுவரை இல்லாத அளவுக்கான டிமாண்டை எட்டியுள்ளது. உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்த உரிமையைக் கைப்பற்ற களத்திலும் குதித்துள்ளன. 

மேலும் படிக்க | INDvsSA: ஸ்ரேயாஸ் செய்த தவறால் தோல்வியடைந்த இந்திய அணி

10 நிறுவனங்கள்

இதுவரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி எண்டர்டெயின்மென்ட், கூகுள் மற்றும் ஆப்பிள், அமேசான், ரிலையன்ஸ் ஜியோ என 10 கம்பெனிகள் ஏலத்துக்கு விண்ணப்பித்துள்ளன. இந்த ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் 29.50 லட்சம் ரூபாய் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். அந்த தொகை திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. எனினும் இந்த தொகையை செலுத்தி 10 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளன. 

ஏலத்தின் உரிமை

இந்த ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பெறுவார்கள். இந்த முறை ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஆசியா, டிஜிட்டல், டிஜிட்டல் அல்லாத, உலகம் என 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்துள்ளது. 

அம்பானி vs அமேசான்

10 நிறுவனங்கள் பங்கேற்றிருந்தாலும் இறுதிக் கட்டத்தில் அமேசான் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7.7 பில்லியன் அமெரிக்கன் டாலருக்கு ஒப்பந்தம் செல்ல வாய்ப்பிருக்கும் நிலையில், இரண்டு நிறுவனங்களும் கடும்போட்டி போடுவதாக கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் வெற்றி பெறுவதற்காக முகேஷ் அம்பானி, பாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான அனில் ஜெயராஜ் மற்றும் குல்சன் வெர்மா ஆகியோரை நியமித்துள்ளார். ஜூன் 12 ஆம் தேதி ஐபிஎல் மீடியா ஏலத்தின் உரிமையை கைப்பற்றியவர்கள் யார்? என்ற விவரம் அறிவிக்கப்பட உள்ளது. 

மேலும் படிக்க | Pakistan Cricket: தடைக்குப் பிறகு திரும்பும் பாகிஸ்தானின் புயல்வேக பந்துவீச்சாளர்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

அமேசான் நிறுவனம் ஏற்கனவே கால்பந்து தொடர்களை ஒளிபரப்பும் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்போது கிரிக்கெட் ஒளிபரப்பிலும் களம் குதித்திருக்கிறது. இதில் வெற்றி பெறுமா? என தெரியவில்லை. மூன்றாவதாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் மீடியா உரிமையை விட்டுவிடக்கூடாது என்பதில் முடிவாக இருப்பதாகவும், அதற்கேற்ப காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News