கொல்கத்தா: 3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 54-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா - புனே சிட்டி அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.
மும்பை (22 புள்ளி), டெல்லி (20 புள்ளி), கொல்கத்தா (20) ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கும் லீக் ஆட்டத்தில் அரை இறுதியை உறுதி செய்து விட்ட மும்பை சிட்டி -டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனுக்கான இறுதிப்போட்டி கேரள மாநிலம் கொச்சியில் டிசம்பர் 18-+ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.