Ishan kishan: ஐசிசி ரேங்கிங்கில் சாதனை படைத்த இஷான் கிஷன்

ஐசிசி தரவரிசையில் அதிக இடங்கள் முன்னேறிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இஷான் கிஷன்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 16, 2022, 11:53 AM IST
  • ஐசிசி தரவரிசைப் பட்டியலில் சாதனை
  • இஷான் கிஷன் 68 இடங்கள் முன்னேறினார்
  • டாப் 10 லிஸ்டில் இருக்கும் ஒரே வீரர்
Ishan kishan: ஐசிசி ரேங்கிங்கில் சாதனை படைத்த இஷான் கிஷன்  title=

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் இதுவரை எந்தவொரு வீரருக்கும் கிடைக்காத அங்கீகாரம் கிடைத்துள்ளது. முதன்முறையாக 68 இடங்கள் முன்னேறிய முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கும் அவர், டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

மேலும் படிக்க | அயர்லாந்து தொடருக்கு தயாராகும் இளம் வீரர்? வாய்ப்பு கொடுக்குமா பிசிசிஐ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த இஷான் கிஷன் அடுத்த இரு போட்டியிலும் தொடர்ச்சியாக பங்களிப்பைக் கொடுத்தார். அவரின் இந்த ஆட்டம் ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலிலும் எதிரொலித்தது. 68 இடங்கள் கிடுகிடுவென முன்னேறிய அவர், 689 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன்களுக்கான டாப் 10 லிஸ்டில் 7வது இடத்தில் உள்ளார்.

818 புள்ளிகளுடன் முதல் இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இருக்கிறார். அவருக்கு அடுத்து 2வது இடத்தில் பாகிஸ்தான் வீரரான முகமது ரிஸ்வான் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் மூன்றாவது இடத்தில் உள்ளார். இஷான் கிஷனுக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 14 வது இடத்தில் இருக்கிறார். ஸ்ரேயாஸ் அய்யர் 16வது இடத்திலும், ரோகித் சர்மா 17வது இடத்திலும் இருக்கின்றனர். பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் டாப் லிஸ்டில் இடம்பெறவில்லை.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா!

ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் பாபர் அசாம் இருக்கிறார். 3வது இடத்தில் விராட் கோலியும், 4வது இடத்தில் ரோகித் சர்மாவும் இருக்கின்றனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா 5வது இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஜோரூட் முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8வது இடத்திலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி 10வது இடத்திலும் இருக்கின்றனர். பந்துவீச்சாளர்களில் அஸ்வின் இரண்டாவது இடத்திலும், பும்ரா 3வது இடத்திலும் இருக்கின்றனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News