Kane Williamson Injury: ஐபிஎல்-க்கு ஆசைப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டை தொலைச்ச வில்லியம்சன்..!

Kane Williamson injury update: நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஐபிஎல் விளையாட ஆசைப்பட்டு இப்போது காயம் காரணமாக சர்வதேச போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 1, 2023, 04:13 PM IST
 Kane Williamson Injury: ஐபிஎல்-க்கு ஆசைப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டை தொலைச்ச வில்லியம்சன்..! title=

வில்லியம்சன் காயம் 

ஐபிஎல் 2023 முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றாலும், முக்கிய வீரரான வில்லியம்சன் அந்த அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார். பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த அவர், பவுண்டரி எல்லைக்கோடு அருகே நின்றபோது சிறப்பாக கேட்ச் செய்ய முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக முழங்காலில் காயம் ஏற்பட்டு, ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறி இருக்கிறார். அவரின் வெளியேற்றம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 

சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு

வில்லியம்சன் சென்னை அணிக்கு எதிரான பீல்டிங்கில் காயமடைந்தவுடன் சாய் சுதர்சன் அவருக்கு பதிலாக பீல்டிங் வந்தார். அப்போது அவர் சப்ஸ்டிடியூட் பிளேயராக மட்டுமே உள்ளே இருந்த நிலையில், வில்லியம்சன் பேட்டிங் செய்ய முடியாது என தெரிந்தவுடன் இம்பாக்ட் பிளேயராக அறிவிக்கப்பட்டார். இளம் வீரரான அவரும் சிறிது நேரம் மட்டுமே களத்தில் இருந்தாலும் கவனிக்கும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணி சேஸிங் செய்ய உதவினார். 

மேலும் படிக்க | IPL 2023: பும்ராவிற்கு பதில் மும்பை அணியில் இணைந்த ஆர்சிபி வீரர்! யார் தெரியுமா?

வில்லியம்சன் முழுவதுமாக விலகல்

இன்னும் ஒரு சில நாட்களில் வில்லியம்சனுக்கான காயம் குணமடைந்து முழுமையாக ஐபிஎல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடரை விட்டு அவர் முழுவதுமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேனில் வில்லியம்சனுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் தீவிரமாக இருப்பதால், மேற்கொண்டு அவரால் ஐபிஎல் விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து ஒரு போட்டி கூட விளையாடாமல் விலகியிருக்கிறார் வில்லியம்சன். அவருடைய சர்வதேச கிரிக்கெட் பயணமும் இப்போதைக்கு கேள்விக்குறியாகியுள்ளது. உலக கோப்பைக்கு முன்பாக காயத்தில் இருந்து மீண்டுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

குஜராத் டைட்டன்ஸூக்கு பின்னடைவு

ஐபிஎல் மினி ஏலத்தில் கேன் வில்லியம்சனை ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. மிடில் ஆர்டரில் கேன் வில்லியம்சன் அணிக்கு மிக முக்கியமான வீரராக இருப்பார் என அந்த அணி நிர்வாகம் நம்பியது. ஆனால், காயம் காரணமாக குஜராத் அணிக்காக வரும் போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. வில்லியம்சன் 2015 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானார். அவர் இதுவரை 77 போட்டிகளில் விளையாடி 36.22 சராசரியிலும் 126.03 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 2,101 ரன்கள் எடுத்துள்ளார். 18 அரைசதங்கள் அடித்துள்ளார். கடந்த சீசன் வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக வில்லியம்சன் இருந்தார்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2023 முதல் போட்டியை வென்று நம்பிக்கை நட்சத்திரமாய் உயர்ந்தது குஜராத் டைட்டன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News