IPL 2023 CSKvsGT: சிஎஸ்கே பந்துவீச்சை சிதறடித்த தமிழக வீரர்..! 4 ரன்களில் சதம் மிஸ்

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்த குஜராத் அணி 214 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்து 4 ரன்களில் சதத்தை மிஸ் செய்தார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 29, 2023, 09:45 PM IST
  • சென்னை அணிக்கு எதிராக குஜராத் அதிரடி
  • தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 ரன்கள் குவிப்பு
  • வரலாறு படைக்குமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
IPL 2023 CSKvsGT:  சிஎஸ்கே பந்துவீச்சை சிதறடித்த தமிழக வீரர்..! 4 ரன்களில் சதம் மிஸ் title=

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பவுலிங் தேர்வு செய்தார். மழை குறுக்கீடு இருக்கலாம் என்பதால், அதனை மனதில் வைத்து பவுலிங் எடுத்தார். குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும்போது கூட, டாஸ் வெற்றி பெற்றிருந்தால் நாங்களும் பவுலிங்கையே எடுத்திருப்போம், ஆனால் நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றை பற்றி கவலைப்படத் தேவையில்லை. பேட்டிங் சிறப்பாக விளையாடுவோம் என கூறினார். அவர் கூறியது போலவே 20 ஓவர்களும் குஜராத் அணி அதிரடியாக விளையாடி 214 ரன்கள் குவித்தது. 

கில் - சஹா சிறப்பான தொடக்கம்

சூப்பர் பார்மில் இருக்கும் சுப்மான் கில் மற்றும் விருதிமான் சஹா ஆகியோர் வழக்கம்போல குஜராத் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முதல் 2 ஓவர்கள் மெதுவாக தொடங்கினாலும், 3வது ஓவரில் இருந்து டாப் கியரில் அடிக்க ஆரம்பித்து ரன்களை எடுக்கத் தொடங்கினர். தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே இருவரின் ஓவர்களிலும் சிக்சரும் பவுண்டரிகளுமான விளாச தொடங்கினர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியது. 6.6 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்தது. 20 பந்துகளில் 39 ரன்கள் விளாசியிருந்த சுப்மான் கில், தோனியின் அசத்தலான ஸ்டம்பிங் மூலம் அவுட்டானார்.

மேலும் படிக்க | ரிசர்வ் டே ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு? தோனி - ஹர்திக் பிளான் ரெடி..!

தமிழக வீரர் சுதர்சன் சரவெடி 

கில் அவுட்டானாலும் விருதிமான் சஹா சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்தார்.39 பந்துகளில் 54 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 5 பவுண்டரிகளும் 1 சிக்சர்களும் விளாசி அவுட்டானார். ஓப்பனிங் இறங்கிய இருவரும் அவுட்டானாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் வெளுத்து வாங்கினார். கிடைக்கும் பந்துகளையெல்லாம் பவுண்டரியும் சிக்சருமாக விளாசிய அவர், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், 96 ரன்கள் எடுத்திருந்தபோது பத்திரனா பந்தில் எல்பிடபள்யூ என்ற முறையில் அவுட்டானார். இதில் 6 சிக்சர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவே தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடியிருந்தாலும், ரசிர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 

சிஎஸ்கேவுக்கு மெகா இலக்கு நிர்ணயம் 

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி இமாலய ஸ்கோரை நிர்ணயித்தது. 20 ஓவர்களை விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. கடைசி வரை விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். 215 ரன்கள் எடுத்தால் வெற்றிபெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றலாம் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது பேட்டிங் களமிறங்கியது. 

மேலும் படிக்க | IPL 2023 CSKvsGT: டாஸ் போடும் போது வருத்தப்பட்ட தோனி..! ரசிகர்களுக்காக என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News