மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் காயம் காரணமாக பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன், பவுலிங் தேர்ந்தெடுத்தார்.
மேலும் படிக்க | தோனியுடன் டீல் பேசிய ஹர்திக் பாண்டியா
பஞ்சாப் அணியில் தவான் மற்றும் பிரப்சிம்ரன் ஆகியோர் களமிறங்கினர். 11 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆடிக் கொண்டிருந்த பிரப்சிம்ரன், நடராஜன் வீசிய 5வது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவருடைய அவுட் தான் சர்ச்சையானது. பேட்டில் பட்டது குறித்து பவுலர் நடராஜன் மற்றும் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தெளிவாக கூறாததால் மைதானத்தில் குழப்பம் நிலவியது.
கேப்டன் வில்லியம்சனும் குழப்பத்தில் ரிவ்யூ எடுக்கலாமா? வேண்டாமா? என வீரர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். அதற்குள் ரிவ்யூ டைம் பூஜ்ஜியத்தை எட்ட, அந்த நேரத்தில் வில்லியம்சன் ரிவ்யூ எடுப்பதாக கூறினார். அம்ப்யரும் வில்லியம்சன் அப்பீலுக்கு ஒப்புக்கொண்டு ரிவ்யூ பரிந்துரை செய்தார். இதற்கு களத்தில் இருந்த பஞ்சாப் பேட்ஸ்மேன் பேரிஸ்டோவ் அப்பீல் செய்தார். டைம் முடிந்த பிறகு எப்படி அப்பீல் கொடுப்பீர்கள்? என கேட்க, அம்ப்யர் மழுப்பலாக பதில் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
மேலும் படிக்க | ’எனக்கு என்டுகார்டா?’ இந்திய அணிக்கு திரும்புவேன் என மாஸாக கூறிய வீரர்
பின்னர், ரிவ்யூவில் பிரப்சிம்ரன் அவுட் என தெரியவந்து, வெளியேறினார். இந்த சர்ச்சைக்குரிய ரிவ்யூவால் பஞ்சாப் அணி கூடாரத்தில் சலசலப்பு எழுந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், லிவிங்ஸ்டோன் அதிரடியில் அந்த அணி 151 ரன்கள் எடுத்தது. அவர் 33 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் மட்டும் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR