IPL 2020: KKR Captain பதவியிலிருந்து விலகினார் Dinesh Karthik, புதிய கேப்டனானார் Eoin Morgan

KKR இதுவரை ஏழு போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2020, 03:50 PM IST
  • KKR கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தினேஷ் கார்திக்.
  • கேப்டன் பொறுப்பை அவர் எயோன் மோர்கனுக்கு ஒப்படைத்தார்.
  • போட்டியின் ஆரம்ப கட்டத்தில் கே.கே.ஆரின் இரண்டு தோல்விகளுக்குப் பிறகு கார்த்திக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
IPL 2020: KKR Captain பதவியிலிருந்து விலகினார் Dinesh Karthik, புதிய கேப்டனானார் Eoin Morgan  title=

IPL 2020 UAE-ல் நடந்து வருகிறது. புள்ளிகளின் பட்டியலில் அணிகள் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் கேப்டன் தினேஷ் கார்திக் (Dinesh Karthik) கேப்டன் பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினார். தலைமைப் புறுப்பை அவர், 2019 ஐ.சி.சி உலகக் கோப்பையை (ICC World Cup) வென்ற கேப்டன் எயோன் மோர்கனுக்கு (Eoin Morgan) ஒப்படைத்துள்ளார்.

கார்த்திக் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்கும் அணிக்கு இன்னும் அதிக பங்களிப்பை அளிப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் 2020-ல் (IPL 2020) இல் KKR சிறப்பாக ஆடி வருவதால், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கான கார்த்திக்கின் முடிவு அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.

KKR இதுவரை ஏழு போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது. அபுதாபியில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் இருந்து மோர்கன் (Eoin Morgan) KKR-ஐ வழிநடத்தத் தொடங்குவார்.

ALSO READ: IPL 2020: நடப்பு IPL சீசனிலிருந்து விலகிய இஷாந்த் ஷர்மா... காரணம் என்ன தெரியுமா?

KKR-ன் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், “அணிக்கு எப்போதும் முன்னுரிமைக் கொடுக்கும் தினேஷ் கார்திக் போன்ற தலைவர்களைப் பெற்றது எங்கள் அதிர்ஷ்டம். அவரைப் போன்ற ஒருவர் இது போன்ற ஒரு முடிவை எடுக்க அதிக துணிச்சல் தேவை. அவரது முடிவால் நாங்கள் ஆச்சரியப்பட்டாலும், அவருடைய விருப்பங்களை நாங்கள் மதிக்கிறோம். 2019 உலகக் கோப்பையை வென்ற, தற்போதைய துணை கேப்டனான எயோன் மோர்கன், அணியை முன்னோக்கி வழிநடத்த தயாராக இருப்பதும் எங்களுடைய அதிர்ஷ்டம்தான். இந்த போட்டியின் போது டி.கே மற்றும் ஈயோன் இணைந்து சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த மாற்றம் அணி தடையின்றி நன்றாக விளையாட உதவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

போட்டியின் ஆரம்ப கட்டத்தில் கே.கே.ஆரின் இரண்டு தோல்விகளுக்குப் பிறகு கார்த்திக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிராக சில தைரியமான முடிவுகளை எடுத்து அவர் வலுவாக முன்னேறினார்.

இருப்பினும், அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது அவரது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காக இருக்கலாம். IPL 2020 இல் இது வரை ஒரு அரைசதம் தவிர, கார்த்திக் பெரிதாக பேட்டிங்கில் ஷோபிக்கவில்லை. இப்போது கேப்டன் என்ற இறுக்கம் இல்லாமல், தன்னுடைய பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த அவர் விரும்புகிறார். 

ALSO READ: ‘CSK-வை ஒரு Government Job போல் நினைக்கிறார்கள்’ வீரர்களின் மெத்தனத்தை சுட்டிக்காட்டிய Sehwag

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News