ஐபிஎல் 2017: பிளே-ஆப் தகுதியை இழந்த டெல்லி - பெங்களூரு மோதல்

Last Updated : May 14, 2017, 03:49 PM IST
ஐபிஎல் 2017: பிளே-ஆப் தகுதியை இழந்த டெல்லி - பெங்களூரு மோதல் title=

இன்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி 13 ஆட்டத்தில் 6 வெற்றி, 7 தோல்வி பெற்றுள்ளது. தனது கடைசி ஆட்டத்தில் புனே அணிக்கு எதிராக 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பெங்களூரு அணி  13 ஆட்டத்தில் 3 வெற்றி, 10 தோல்வி பெற்றுள்ளது தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது.

இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. மேலும் இந்த இரு அணிகளுக்கும் இந்த ஐபிஎல் சீசனில் கடைசி லீக் போட்டியாகும் இது.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

டெல்லி டேர்டேவில்ஸ்:

ஜாகீர் கான் (கேப்டன்), முகமது ஷமி, சபாஷ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிராத்வெயிட், ஷமா மிலிந்த், கிறிஸ் மோரிஸ், கருண் நாயர், ரிஷப் பந்த், ஹலீத்அகமது, கோரே ஆண்டர்சன், மேத்யூஸ், ரபாடா, முருகன் அஸ்வின், பாட்கம்மின்ஸ், நவ்தீப் ஷைனி, அங்கீத் பாவ்னே, ஷசாங்க் சிங், பில்லிங்ஸ், சேம் சயத், சஞ்சு சேம்சன், ஆதித்யா தாரே, பிரதியுஸ் சிங்.  

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு:

விராத் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஷான் வாட்சன், கிறிஸ் கெய்ல், நாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக், இக்பால் அப்துல்லா, அனிகெட் சவுத்ரி, ஹர்ஷால் படேல்.

Trending News