ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26) மெல்பர்ன் மைதானத்தில் அதிகாலை துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், முரளி விஜய் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டதால், அவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் ஸ்கோர் 40 ரன்கள் எடுத்திருந்த போது, ஹனுமா விஹாரி 8(66) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த சேதுஷ்வர் புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் இணைந்து ஆடினர். ஒரு கட்டத்தில் நன்றாக ஆடி வந்த மயங்க் அகர்வால் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன்மூலம் சர்வேதே டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை அடித்துள்ளார். முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்தார். மயங்க் அகர்வால் 76(161) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
பின்னர் சேதுஷ்வர் புஜாரா மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சேதுஷ்வர் புஜாரா தனது 21வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இவர் டெஸ்ட் போட்டியில் இதுவரை 16 சதங்களை அடித்துள்ளார். அதில் மூன்று முறை 200 ரன்கள் அதிகமாக எடுத்துள்ளார்.
மூன்றாவது டெஸ்ட்டின் முதல் நாளில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. சேதுஷ்வர் புஜாரா* 68(200) மற்றும் விராட் கோலி* 47(107) ரன்களுடன் களத்தில் உள்ளனர். எட்டு விக்கெட் கையில் இருக்கும் நிலையில், நாளை தொடர்ந்து ஆடும் இந்திய அணி நல்ல ரன் விகிதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமைக்க முடியும்.
Stumps on Day 1 of the 3rd Test.#TeamIndia on top with 215/2 (Pujara 68*, Virat 47*)
Scorecard - https://t.co/xZXZnUvzvk #AUSvIND pic.twitter.com/lxegdNaU5N
— BCCI (@BCCI) December 26, 2018