இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில், தற்போது டெஸ்ட தொடர் நடைப்பெற்று வருகின்றது.
இத்தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி டிச., 6-ஆம் நாள் காலை 5.30 மணியளவில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 2(8), முரளி விஜய் 11(22) ரன்களுக்கு வெளியேற, முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய புஜாரா நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 246 பந்துகளில் 123 ரன்கள் குவித்த புஜாரா ஆட்டத்தின் 87.5-வது பந்தில் வெளியேறினார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற புஜாராவின் சதம் இந்தியாவினை 250 ரன்கள் குவிக்க உதவியது. முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா, அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியினை 235 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியது.
India win opening Test
Ashwin gets his first wicket of the day, snaring Hazlewood, to deny Australia what would have been a terrific victory.The visitors win by 31 runs. #AUSvIND SCORECAR ttps://t.co/sCMk42Mboc pic.twitter.com/SZt5DOTFQq
— ICC (@ICC) December 10, 2018
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸினை தொடர்ந்த இந்தியா நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 106.5 ஓவர்கள் விளையாடி 307 ரன்கள் குவித்தது. புஜாரா 71(204) ரன்களும், ரஹானே 70(147) ரன்கள் குவித்து அணிகு பலம் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸி., நிதானமாக விளையாடினர். எனினும் இந்திய வீரர்களின் பந்துவிச்சீனை சமாளிக்க இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடுத்து வெளியேறினர். இதன் காரணமாக கடைசி நாள் ஆட்டமான இன்று 119.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாக புஜாரா அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 4 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.