17:15 19-01-2020
பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா (India vs Australia) அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவென் ஸ்மித் (Steven Smith) சதம் அடித்து 131(132) ரன்களுக்கு அவுட் ஆனார். அவருடன் இணைந்து மார்னஸ் லாபுசாக்னே 54(64)அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் அதிக அளவில் ரன்கள் எடுக்கவில்லை.
இந்திய அணி சார்பில் முகமது ஷமி (Mohammed Shami) நான்கு விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டும், நவ்தீப் சைனி மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
இந்திய அணி வெற்றி பெற 287 ரன்கள் தேவை. இன்னும் சற்று நேரத்தில் களம் இறங்க உள்ளது.
13:09 19-01-2020
கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி பவுலிங் செய்ய உள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அனைத்து போட்டியிலும் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி: பெங்களூரில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் (India vs Australia) இடையிலான தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இது தொடர் யாருக்கு என்று தீர்மானிக்கும் போட்டி. இந்த போட்டியில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்டீவ் ஸ்மித், நவ்தீப் சைனி, ஆடம் ஜாம்பா உள்ளிட்ட சில சிறப்பு வீரர்களை கிரிக்கெட் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். யார் எந்த போட்டியின் வெற்றி நாயகனாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடைசியாக நடந்த ஆஸ்திரேலியா (Australia) மற்றும் இந்தியா (India) இடையிலான நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே / கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.