2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வென்ற பிறகு, இவ்விரு அணிகளும் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் மோதிக் கொள்ளவில்லை. இலங்கையின் கண்டியில் நடைபெறும் ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 2 ஆம் தேதி மீண்டும் மோத இருக்கின்றன. இப்போட்டியை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. போட்டியை பாகிஸ்தான் நடத்தினாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி அங்கு செல்ல மறுத்துவிட்டது. இதனால் இப்போட்டி இலங்கையில் நடத்தப்படுகிறது.
எப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற்றாலும் கிரிக்கெட் வட்டாரத்தில் அதற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. அவை கிரிக்கெட்டின் எல் கிளாசிகோவாகவும் கருதப்படுகின்றன. இந்தியா தனது கடைசி ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்திருக்கிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ்க்குப் செய்த தெம்புடன் பாகிஸ்தான் களம் காண இருக்கிறது. இரு அணிகளுமே வெற்றி பெற்ற நம்பிக்கையில் இருந்தாலும் இந்தியா வெற்றிக்கு அருகில் ஒரு படி மேலே இருப்பதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | Fact Check: பாபர் அசாம் சகோதரி உறவு பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா?
நேருக்கு நேர் மோதல்
ஆசிய கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா 7 வெற்றியும், பாகிஸ்தான் 5 வெற்றியும் பெற்றிருக்கின்றன. 1997 ஆண்டு நடைபெற்ற ஒரே ஒரு போட்டி மட்டும் முடிவு இல்லாமல் முடிந்தது. ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 300 ரன்களை இந்தியா 3 முறை தாண்டியிருக்கிறது. அதில், இரண்டு முறை வெற்றி, ஒரு முறை தோல்வியை சந்தித்திருக்கிறது.
பல்லேகலையில் இந்தியாவின் சாதனை
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா மூன்று முறை விளையாடி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் இந்தியா ஒருமுறை முதலில் பேட் செய்தும், மற்ற இரண்டு வெற்றிகள் சேஸிங் செய்யும் போதும் கிடைத்தன. மூன்று போட்டிகளும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
பல்லேகலேயில் பாகிஸ்தானின் சாதனை
மறுபுறம், பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் ஐந்து ஆட்டங்களில் விளையாடி இரண்டு முறை வெற்றியும் மூன்றில் தோல்வியும் அடைந்தது. இந்த மைதானத்தில் இலங்கையுடன் மூன்று முறை விளையாடிய பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் நியூசிலாந்திடம் தோற்றும், ஜிம்பாப்வேக்கு எதிராக வென்றம் இருக்கிறது.
விராட் கோலியின் தாக்கம்
பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி எப்போதும் சிறப்பான சாதனை படைத்துள்ளார். மொத்தம் 13 ஆட்டங்களில் கோஹ்லி 2 சதங்கள் உட்பட 536 ரன்கள் எடுத்தார். ஆசிய கோப்பையில், கோஹ்லி பாகிஸ்தானை மூன்று முறை எதிர்கொண்டிருக்கிறார். அதில் 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதில் 2012ல் அவரது சிறந்த 183 ரன்களும் அடங்கும். இருப்பினும், பல்லேகெலேவில் கோஹ்லியின் சாதனை நம்பத்தகுந்ததாக இல்லை. ஏனெனில் அவர் மூன்று போட்டிகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
கேஎல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் வருகை
கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பியது இந்திய அணிக்கு, குறிப்பாக மிடில் ஆர்டருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. அதேபோல் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ராவும் திரும்பியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது எல்லா அம்சங்களும் இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ