IND vs ENG: பயிற்சியின் போது காயம்? இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா இல்லை?

India vs England: கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.  இதனால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சதேகத்தில் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 29, 2023, 11:25 AM IST
  • ரோஹித் சர்மாக்கு பயிற்சியின் போது மணிக்கட்டில் காயம்.
  • ரோஹித்தை பிசியோ அதிகரிகாரிகள் உடனே பரிசோதித்தனர்.
  • பெரிய காயம் இல்லை என்று கூறப்படுகிறது.
IND vs ENG: பயிற்சியின் போது காயம்? இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா இல்லை? title=

IND vs ENG ODI: லக்னோவில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டியின் பயிற்சியின் போது ரோஹித் சர்மாவின் மணிக்கட்டில் அடிபட்டது. ரோஹித் ஷர்மாவை உடனடியாக பிசியோ அதிகாரிகள் பார்வையிட்டார். ரோஹித் ஷர்மாவின் காயத்தின் அளவு குறித்து தெளிவு இல்லாததால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இன்றைய போட்டி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அதிகம் எதிர்பாக்கப்பட்ட ஒரு போட்டி ஆகும்.  ரோஹித்துக்கு காயம் பெரிதாக இல்லை என்றும், இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் இந்திய அணி நம்புகிறது. உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஹிட்மேன் ரோஹித் தொடர்ந்து பவர்பிளேயில் ஆதிக்கம் செலுத்தினார். ஐந்து போட்டிகளில் ஒரு சதம் உட்பட 133 ஸ்டிரைக் ரேட்டில் 311 ரன்கள் எடுத்துள்ளார். 

மேலும் படிக்க | ஐபிஎல் 2024 ஏலம் எங்கு? எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?

இதற்கிடையில், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாமல் விளையாடுகிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் மோதலின் போது ஹர்திக் காயமடைந்தார், பின்னர் அவர் NCA க்கு அனுப்பப்பட்டார். ஆரம்பத்தில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னர் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவார் என்று பிசிசிஐ கூறி இருந்தது.  இருப்பினும், சமீபத்திய அப்டேட்டின்படி, ஹர்திக் தசைநார் கிழிந்திருப்பதால், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆட்டங்களை இழக்க நேரிடும்  என்று கூறப்படுகிறது.  இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கே.எல்.ராகுல் கலந்து கொண்டு, ஹர்திக் பாண்டியா அணிக்கு வரமாட்டார் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெறுவார் என்றும் ராகுல் கூறினார்.

“இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா இல்லை. அவருடைய இடத்தில் சூர்யா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்” என்று ராகுல் சனிக்கிழமையன்று போட்டிக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். ரோஹித் சர்மாவுடன், விராட் கோலியும் உலகக் கோப்பையில் சிறந்த ஃபார்மில் உள்ளார். கோலி ஐந்து ஆட்டங்களில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் உட்பட 354 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் (49) அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்ய கோலி இன்னும் ஒரு சதம் மட்டுமே எஞ்சியுள்ளார்.  2023 உலகக் கோப்பையில் டீம் இந்தியா சிறந்த ஃபார்மில் உள்ளது, இதுவரை விளையாடிய ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. மறுபுறம், இங்கிலாந்து தான் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்து, உலக கோப்பை போட்டியிலிருந்து முன்கூட்டியே வெளியேறும் விளிம்பில் உள்ளது. அரையிறுதி வாய்ப்பைப் பெற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் .
 
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா.

மேலும் படிக்க - இந்தியாவின் முதல் இடத்திற்கு அடுத்தடுத்து வரும் ஆப்பு... உலகக் கோப்பையில் ட்விஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News