IND v ENG: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் அஷ்வின்!

India vs England Test Series 2024: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்த வாய்ப்புகள் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jan 23, 2024, 10:34 AM IST
  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்.
  • அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்த வாய்ப்பு.
  • தற்போது 490 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
IND v ENG: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் அஷ்வின்!  title=

India vs England Test Series 2024: ஜனவரி 25 ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது.  2022 ஆம் ஆண்டு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் ஷர்மா, முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவை நடந்த உள்ளார். சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் தொடர் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. அதே போன்று மூன்றாவது முறையாக வெற்றி பெற இந்தியா இலக்காகக் கொண்டிருக்கும். இந்த டெஸ்ட் தொடரில் அஷ்வின் மற்றொரு பெரிய மைல்கல்லைப் தொட உள்ளார்.

மேலும் படிக்க - காலையில் திருமண அறிவிப்பு! மாலையில் டி20யில் புதிய சாதனை படைத்த சோயப் மாலிக்!

மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின் புதிய வரலாற்றை பதிவு செய்ய உள்ளார்.  இதுவரை அவர் 95 டெஸ்டில் 490 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இன்னும் 10 விக்கெட்கள் எடுத்தால் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை தொட உள்ளார்.  சொந்த மண்ணில் அவரின் சிறந்த பவுலிங்கை கருத்தில் கொண்டு, ஐதராபாத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 விக்கெட்டுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  டெஸ்டில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளே முன்னிலையில் உள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே 132 டெஸ்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாடினால் அஸ்வின் கும்ளேவின் சாதனையை முறியடிக்க முடியும். கடந்த அஸ்வின் 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின், அதன் பின்னர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். எந்த ஒரு சொந்த டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் இந்தியா விளையாடும் போது அஸ்வின் ஒருசில போட்டிகளில் விளையாடவில்லை.  அஸ்வின் 2011 முதல் 2017 வரை மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.  அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நிறைவு செய்வதை தவிர, 100 டெஸ்ட் போட்டிகளையும் நிறைவு செய்வார். அவர் இந்தியாவுக்காக 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்

அனில் கும்ப்ளே, ஆர் அஷ்வின் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் கபில்தேவ் உள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் 434 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.  அடுத்தபடியாக 417 விக்கெட்களை வீழ்த்தி ஹர்பஜன் சிங் உள்ளார். தலா 311 விக்கெட்களுடன், இஷாந்த் சர்மா மற்றும் ஜாகீர் கான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

டெஸ்ட் தொடர்

1வது டெஸ்ட்: ஜனவரி 25–29, ஹைதராபாத்
2வது டெஸ்ட்: பிப்ரவரி 2-6, விசாகப்பட்டினம்
3வது டெஸ்ட்: பிப்ரவரி 15-19, ராஜ்கோட்
4வது டெஸ்ட்: பிப்ரவரி 23-27, ராஞ்சி
5வது டெஸ்ட்: மார்ச் 7–11, தர்மசாலா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி: ரோஹித் சர்மா (C), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (WK), கேஎஸ் பாரத் (WK), துருவ் ஜூரல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (WC), அவேஷ் கான்

மேலும் படிக்க - IND vs ENG: இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி... விராட் கோலி திடீர் விலகல் - என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News