2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா

Last Updated : Mar 28, 2017, 12:40 PM IST
2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா title=

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.  

முதல் டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி. இரண்டாவது டெஸ்ட் இந்தியா வெற்றி. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. நான்காவது டெஸ்ட் இந்தியா வெற்றி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், 

பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 

ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தர்மசாலாவில் தொடங்கியது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 118.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 332 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியை விட 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

2-வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே இந்திய அணி வெற்றி பெற 106 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது. 

2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலே 3 பவுண்டரிகள் அடித்து அசத்தினார் லோகேஷ் ராகுல். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்த நிலையில் 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் (8) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பிறகு வந்த புஜாரா(0) ரன் அவுட் ஆனார்.  மறுமுனையில் லோகேஷ் ராகுல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது அவருன் ராகனே விளையாடி வருகிறார். 

லோகேஷ் ராகுல்(51), ராகனே(38) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இந்திய வெற்றி பெற உறுதுணையாக இருந்தனர். இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.

 

 

 

 

 

Trending News