உலக கோப்பை பயிற்ச்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

நேற்று நடைபெற்ற உலக கோப்பை பயிற்ச்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியடு ஆப்கானிஸ்தான் அணி. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 25, 2019, 09:53 AM IST
உலக கோப்பை பயிற்ச்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் title=

டெல்லி/இங்கிலாந்து: 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. 

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தொடரில் நுழைந்தது.

உலக கோப்பையில் பங்கேற்ப்பதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. ஒவ்வொரு நாளும் 2 பயிற்ச்சி ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த பயிற்ச்சி ஆட்டம் மே 24 முதல் மே 28 வரை நடைபெறுகிறது. 

நேற்று இரண்டு பயிற்ச்சி ஆட்டம் நடைபெற்றது. ஒரு பயிற்ச்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டல் மைதானத்தில் விளையாடின. அதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 262 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending News