சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்-களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்!
தற்போது நடைப்பெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகள் புரிந்து களக்கினார். குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த இரண்டு இரட்டை, அவரின் தரவரிசை பட்டியல் முன்னேற்றத்திற்கு பெரும் உதவியாய் அமைந்துள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி, 893 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
BREAKING: @imVkohli moves up to second in the latest @MRFWorldwide ICC Test Batting Rankings!https://t.co/n17MBstqrS pic.twitter.com/GHHynglGQd
— ICC (@ICC) December 7, 2017
முதல் இடத்தில் 938 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் உள்ளார்.
மூன்றாம் இடத்தில் 879 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்-ம், 4 ஆம் இடத்தில் இந்திய அணியின் புஜாரா உள்ளார்.
அணிகளின் பட்டியலைப் பொறுத்தவரை இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
Rank | (+/-) | Player | Team | Pts | Avge | Highest Rating |
1 | ( - ) | Steve Smith | Aus | 938 | 60.40 | 941 v Eng at Brisbane 2017 |
2 | (+3) | Virat Kohli | Ind | 893 | 53.75 | 895 v Ban at Hyderabad 2017 |
3 | ( - ) | Joe Root | Eng | 879 | 53.05 | 917 v Aus at Trent Bridge 2015 |
4 | (-2) | C. Pujara | Ind | 873 | 52.96 | 888 v SL at Nagpur 2017 |
5 | (-1) | Kane Williamson | NZ | 865 | 50.66 | 893 v Aus at Perth 2015 |