WI vs NZ போராடி தோற்ற வெஸ்ட் இண்டீஸ்; நியூசிலாந்து முதலிடம்!!

நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 23, 2019, 11:06 AM IST
WI vs NZ போராடி தோற்ற வெஸ்ட் இண்டீஸ்; நியூசிலாந்து முதலிடம்!! title=

மான்செஸ்டர்: 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மோதின. அதில் இந்தியா வெற்றி பெற்றது. 

அதேபோல இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கியது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மார்டின் குப்தில், காலின் முன்ரோ இருவருமே ரன் எடுக்காமலே அவுட் ஆனார்கள். 7 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணியில், பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் நிதானமாக ஆடி அணி சரிவில் இருந்து மீட்டனர். ரோஸ் டெய்லர் அரை சதத்தை பூர்த்தி செய்து 69(95) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேன் வில்லியம்சன் சதம் அடித்தார். அவர் 148(154) ரன்கள் குவித்து அவுட் ஆனார்.  50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்தது.

292 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடினார். மற்றொரு புறத்தில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்த நிலையில், கிறிஸ் கெய்ல் மற்றும் கார்லோஸ் பிராத்வைட் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 

9 விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 48வது ஓவரில் 3 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியும் விளாசினார். வெற்றிக்கு 12 பந்துக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலையில், 49 ஓவர் வீசப்பட்டது. அந்த ஓவரில் 2 ரன்கள் எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்தார் கார்லோஸ் பிராத்வெய்ட். 

7 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் 49 வது ஓவரின் கடைசி பந்தில் பிராத்வெய்ட் அவுட் ஆனார் இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 286 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.

Trending News