பாகிஸ்தான் vs இலங்கை ஆட்டம் மழை காரணமாக ரத்து; இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி

இன்றைய போட்டியில் ஆசிய அணிகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணி மோதுகின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 7, 2019, 08:40 PM IST
பாகிஸ்தான் vs இலங்கை ஆட்டம் மழை காரணமாக ரத்து; இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி title=

20:34 07-06-2019
இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

 

 


டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற உள்ள 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் மற்றும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டம்  பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி புள்ளிபட்டியலில் முன்னேறும். இரண்டு அணிகளும் ஆசிய அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இதுவரை இலங்கையிடம் தோற்றதில்லை. நேருக்கு நேர் மோதியுள்ள 7 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதனை இன்றைய போட்டியிலும் தொடருமா? என்று பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Trending News