சாம்பியன்ஸ் டிராபி 2017: நியூசிலாந்து - வங்காளதேசம் இன்று மோதல்

Last Updated : Jun 9, 2017, 12:54 PM IST
சாம்பியன்ஸ் டிராபி 2017: நியூசிலாந்து - வங்காளதேசம் இன்று மோதல் title=

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 9-வது லீக் ஆட்டதில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் ஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் மழை பெய்து ஆட்டம் ரத்தானதால் தலா ஒரு புள்ளியை பெற்றது இரு அணியும்.

2-வது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது. 
2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியது. இதில் மழை காரணத்தால் வங்காளதேசத்துக்கு ஒரு புள்ளி கிடைத்தது.

தலா ஒரு புள்ளியுடன் உள்ள நியூசிலாந்து, வங்காளசேத்துக்கு இது தான் கடைசி லீக் ஆட்டமாகும். 

Trending News