இந்திய ஹாக்கி வீரர் PR Sreejeshக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு மத்திய அரசால் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ்க்கு, விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க ஹாக்கி இந்தியா, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சிங்கலன்சனா சிங் கங்குஜம், ஆகாஷ்தீப் சிங், தீபிகா தாகூர் ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்க பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு இந்திய தடகள சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.
Hockey India recommends PR Sreejesh for Rajiv Gandhi Khel Ratna Award, and Chinglensana Singh Kangujam, Akashdeep Singh, & Deepika Thakur for Arjuna Award. pic.twitter.com/Yn3dzRlPj1
— ANI (@ANI) May 1, 2019