யூரோ கோப்பை : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது போர்ச்சுகல்

Last Updated : Jul 7, 2016, 09:21 AM IST
யூரோ கோப்பை : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது போர்ச்சுகல் title=

15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. முதலாவது அரைஇறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. 

முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியின் 50-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதனால் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து, 53-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி வீரர் நானி இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். வேல்ஸ் அணியின் இறுதி வரை கோல் அடிக்கும் முயற்சி வீணானது.. 

ஆட்ட முடிவில் போர்ச்சுகல் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

12 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுகல் அணி ஐரோப்பிய கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. போர்ச்சுகல் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். 

இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் உலக சாம்பியன் ஜெர்மன், தொடரை நடத்தும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

Trending News