இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட், கூக் ஜோடி 250 ரன்களை எட்டியுள்ளது!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 7-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. ஆட்டத்தின் இரண்டாம் நாளான நேற்றைய முன் தினம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது, முன்னதாக இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இந்திய அணி 158 ரன்கள் பின்தங்கி இருந்தது.
இந்நிலையில் நேற்று ஆட்டத்தின் மூன்றாம் நாள் துவங்கியது. நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இந்திய வீர்ரகள் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்த அதே வேலையில் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்ற இங்கிலாந்து வீரர்கள் போராடினர்.
ஆட்டத்தின் 95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது. எனினும் ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட இந்தியா 40 ரன்கள் பின்தங்கியது.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குக் மற்றும் ஜென்னிங்ஸ் களமிறங்கினார்கள். ஜென்னிங்ஸ் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து குக் உடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியின் எண்ணிக்கை 62 ஆக இருந்த போது ஜடேஜா வீசிய சுழலில் 20 ரன்கள் அடித்திருந்த மொயின் அலி ஆட்டமிழந்தார், பின்னர் களமிறங்கிய கேப்டன் ரூட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Drinks time in the afternoon session and Cook and Root are still going strong. Their partnership is worth 248*, with England now leading by 351 runs on 311/2. How long until a declaration? #ENGvIND LIVE ➡️ https://t.co/LQoNOzv9xA pic.twitter.com/00Fpu2aBWu
— ICC (@ICC) September 10, 2018
இந்நிலையில், மூன்றாம் நாள் நாள் ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களுக்கு இங்கிலாந்து 2 விக்கெட்டுக்களை இழந்து 114 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 4-ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. களத்தில் இருந்த கூக் மற்றும் ரூட் ஜோடி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். நிதானமாக விளையாடி வரும் இந்த ஜோடி 250 ரன்களை தாண்டியது, இருவரில் ஒருவரது விக்கெட்டை எப்படியாவது எடுத்துவிட வேண்டுமென இந்திய பந்துவீச்சாளர்கள் போராடி வருகின்றனர்.
தற்போதைய நிலைவரப்படி இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 90 ஓவர்கள் முடிய 2 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 121(181) ரன்களுடனும், அலைஸ்டர் கூக் 141(269) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 377 பந்துகளில் 250 குவித்து இந்திய அணிக்கு துயரம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது!