தீபிகா படுகோனேவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்!

பிஃபா உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் கோப்பையை அறிமுகப்படுத்துவதற்காக இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 6, 2022, 06:22 PM IST
தீபிகா படுகோனேவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்! title=

பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் இந்த தொடரின் இறுதிப் போட்டியில் கோப்பையை அறிமுகப்படுத்துவதற்காக இந்திய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா துறையைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது. பிஃபா கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி கத்தாரில் நடைபெற இருக்கிறது. 

மேலும் படிக்க | Round of 16 : மெஸ்ஸியின் புதிய சாதனை... காலிறுதியில் கால் வைத்தது அர்ஜென்டீனா!

இந்த போட்டியில் கோப்பையை அறிமுகப்படுத்துவதற்காக விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பை ஏற்று தீபிகா படுகோனே விரைவில் கத்தார் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 36 வயதான தீபிகா படுகோனே, இத்தகைய அங்கீகாரத்தை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற சிறப்பும் அவருக்கு கிடைக்க இருக்கிறது 

டிசம்பர் 18 ஆம் தேதி லூசெயில் ஸ்டேடியத்தில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் அவர், அப்போது கோப்பையை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்படத்துறையை பொறுத்தவரை ஷாருக்கான் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் பதான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துளார். இதேபோல், அமிதாப் பச்சன் மற்றும் பிரபாஸ் ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் தோற்றது இந்தியாவுக்கு நல்லதுதான்... எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News