கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 6 விக்கெட் இழந்த அணி

கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 13, 2022, 07:55 PM IST
  • கிரிக்கெட் வரலாற்றில் அரங்கேறிய விநோதம்
  • 6 பந்துகளில் 6 விக்கெட் இழந்த அணி
  • பேட்டிங் அணியின் மிக மோசமான ஆட்டம்
கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 6 விக்கெட் இழந்த அணி title=

கிரிக்கெட் போட்டியில் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 6 பந்துகளில் 6 விக்கெட் என்பதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால், அந்த சம்பவமும் நிகழ்ந்திருப்பது தான் வேடிக்கையின் உச்சம். கிரிக்கெட் வரலாற்றிலும் முதன்முறையாக ஒரு அணி 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

மேலும் படிக்க | ரோகித் சர்மாவுக்காக காத்திருக்கும் உலக சாதனை

நேபாள ப்ரோ கிளப் சாம்பியன்ஷிப்பில் மலேசியா கிளப் லெவன் மற்றும் புஷ் ஸ்போர்ட்ஸ் டெல்லி இடையே டி20 போட்டி நடைபெற்றது. இதில் புஷ் ஸ்போர்ட்ஸ் டெல்லி அணி ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. அந்தளவுக்கு பேட்டிங் அணி மோசமாக விளையாடியது. மேலும், இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஓவரை  மலேசிய கிளப் லெவன் சார்பில் விரன்தீப் சிங் வீசினார்.

ஒரு கட்டத்தில் புஷ் ஸ்போர்ட்ஸ் டெல்லி அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 131 ரன்களாக இருந்தது. ஆனால் இந்த அணியின் கடைசி ஓவரில் இப்படியொரு சம்பவம் நிகழும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மலேசிய கிளப் லெவன் பந்துவீச்சாளர் விரந்தீப் சிங் வீசிய அந்த ஓவரில், முதல் பந்தை வைட்டாக வீசினார். இதன்பிறகு, அடுத்த பந்தில், புஷ் ஸ்போர்ட்ஸ் டெல்லி பேட்ஸ்மேன் மிருகங்க் பதக் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அகமது ஃபைஸிடம் கவரில் கேட்ச் ஆனார். 

மேலும் படிக்க | நாங்க திரும்பி வந்துடோம்னு சொல்லு! அதிரடி காட்டிய சிஸ்கே!

இரண்டாவது பந்தில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷான் பாண்டே ரன் அவுட் ஆனார். இதையடுத்து அடுத்த நான்கு பந்துகளில் விரந்தீப் சிங் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரே ஒரு பேட்ஸ்மேன் மட்டும் ரன்அவுட்டானார். இதனால் இப்போட்டி வீடியோ கிரிக்கெட் உலகில் கவனத்தை பெற்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த அணியாகவும் முத்திரை பதித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News