Bizarre BCCI: இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு T20 World Cup பரிசுத் தொகை வழங்கப்படவில்லை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 14 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2020 T20 World Cup இறுதிப் போட்டியில் நுழைந்தது. கோப்பையை வெல்லாவிட்டாலும், ரன்னரான அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பரிசுத்தொகை இன்னும் கொடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 23, 2021, 07:46 PM IST
  • இந்தியா வீராங்கனைகளுக்கு 2020 T20 World Cup பரிசுத் தொகை கொடுக்கப்படவில்லை
  • பரிசுத்தொகை BCCI இடம் கொடுக்கப்பட்டுவிட்டது
  • ஆனால், பரிசுத்தொகையை மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு கொடுக்கவில்லை
Bizarre BCCI: இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு T20 World Cup பரிசுத் தொகை வழங்கப்படவில்லை title=

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 14 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2020 T20 World Cup இறுதிப் போட்டியில் நுழைந்தது. கோப்பையை வெல்லாவிட்டாலும், ரன்னரான அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பரிசுத்தொகை இன்னும் கொடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.

ஆனால் இந்த பரிசுத்தொகை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தான் இருக்கிறது. ஏன் இந்தத் தொகை இன்னும் பிரித்துக் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.

86,000 க்கும் அதிகமான ரசிகர்கள் மத்தியில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா பெண்கள் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

Also Read | விராட் கோலி உலகில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் இல்லை!

இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ரன்னர் அணிக்கு கொடுக்கப்படும் $500,000 பரிசுத்தொகை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) கொடுக்கப்பட்டுவிட்டது.

ஆனால், அந்த பரிசுத்தொகையை இதுவரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு BCCI கொடுக்கவில்லை என்று Telegraph Sport பத்திரிக்கை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக Telegraph Sport இடம் பேட்டியளித்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO of the Federation of International Cricketers’ Associations) டாம் மொஃபாட், ஆகஸ்ட் 2020 இல் இந்த விவகாரம் குறித்து தங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

 Also Read | La Liga சாம்பியன் பட்டத்தை வென்றது அட்லெடிகோ மாட்ரிட் 

"விளையாட்டுகளில் வீரர்களின் கள செயல்திறனுக்காக பரிசுத் தொகை வழங்கப்படுகிறது, இந்தப் பரிசுத்தொகையை தாமதமாக கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று Tom Moffat தெரிவித்தார்.

போட்டி முடிவடைந்த ஒரு வாரத்திற்குள் பரிசுத் தொகையை செலுத்துவதை ஐ.சி.சி (ICC) உறுதி செய்கிறது. வழக்கமாக, வீரர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தும்படி குறிப்பிட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சியிடம் கேட்காவிட்டால், பரிசுத்தொகை அணியின் நிர்வாக வாரியத்திடம் (இந்தியாவில் பிசிசிஐ) அனுப்பப்படும்.

அந்தப் போட்டியில் கலந்துக் கொண்ட மகளிர் கிரிக்கெட் அணியில் உள்ள 15 வீராங்கனைகளுக்கு   தலா 33,000 டாலர்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை பி.சி.சி.ஐ எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.  

Also Read | Ind vs NZ WTC Final: இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் சவால் நிறைந்தது!  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News