ரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே... இனி இந்த வீரருக்கு இடமே கிடையாது - களமிறங்கும் கத்துக்குட்டி

Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிஎஸ்கே அணி பெரும் சிக்கலான சூழலில் இருக்கும் நிலையில், அந்த அணியில் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 24, 2024, 06:41 PM IST
  • சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளது.
  • அதில் 4இல் வெற்றி, 4இல் தோல்வி.
  • பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனி குறைந்தது 5 போட்டிகளில் வெல்ல வேண்டும்.
ரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே... இனி இந்த வீரருக்கு இடமே கிடையாது - களமிறங்கும் கத்துக்குட்டி title=

Chennai Super Kings Latest Updates: நடப்பு ஐபிஎல் (IPL 2024) தொடரின் தற்போதைய புள்ளிப்பட்டியல் உங்களை சற்று வியக்க வைக்கும் எனலாம். மும்பை, பெங்களூரு ஆகிய அணிகள் மிக மிக மோசமான நிலையிலும், சிஎஸ்கே சற்றே மோசமான நிலையிலும் உள்ளதை பார்க்க முடியும். பஞ்சாப், டெல்லி அணிகள் வழக்கம்போல் சொதப்பி வந்தாலும், குஜராத், லக்னோ அணிகள் தொடரில் ஏற்ற இறக்கத்துடன் விளையாடி வருகின்றன. 

ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத் இந்த மூன்று அணிகள்தான் தொடரில் மற்ற அணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ராஜஸ்தான் அணி இப்போது 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 2 போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்த மூன்று அணிகளின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் பலமான காம்பினேஷன்களும், கைக்கொடுக்கும் பேக்அப்களும் எனலாம். 

சிறந்த அணியின் எடுத்துக்காட்டு...

உதாரணத்திற்கு, ராஜஸ்தான் அணியில் சந்தீப் சர்மா, நான்ரே பர்கர், அஸ்வின், பட்லர் ஆகியோர் முதன்மையான காம்பினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இருப்பினும், இவர்கள் பல்வேறு காரணங்களால் வெளியே அமரவைக்கப்பட்ட போது இவர்களுக்கு பேக்அப் வீரர்களாக வந்தவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் தொடர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். தற்போது பர்கரை தவிர அனைத்து வீரர்கள் முக்கிய பிளேயிங் லெவன் காம்பினேஷனுக்கு திரும்பியும் விட்டனர். இதுதான் ஒரு சிறந்த அணியின் எடுத்துக்காட்டு எனலாம்.

மேலும் படிக்க | சென்னை அணி செய்த தவறுகள் இது தான்! பயிற்சியாளர் சொன்ன குற்றசாட்டுகள்!

சிஎஸ்கேவின் முக்கிய பிரச்னை

இதுதான் சிஎஸ்கேவிடம் இல்லாத முக்கிய பிரச்னை எனலாம். வழக்கமாக சிஎஸ்கே அணி (Team CSK) காம்பினேஷனையும் மாற்றாது, பிளேயிங் லெவனையும் மாற்றாது. ஆனால் இம்முறை இரண்டிலும் ஒவ்வொரு போட்டியிலும் மாற்றம் செய்யப்படுகிறது. இது அணி நிர்வாகத்தின் முடிவா, புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவா என்பதெல்லாம் ஒருபுறம், அணியில் சிறந்த பேக்அப் வீரர்கள் இல்லாததுதான் கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்னை.

தீபக் சஹார் எதற்கு?

லக்னோ உடனான கடந்த இரு போட்டிகளிலும் தீபக் சஹார் (Deepak Chahar) மோசமான பந்துவீச்சையும், பீல்டிங்கையும் வெளிப்படுத்தினார். ஆனால் அவரை வெளியே அமரவைத்தால் சிஎஸ்கேவில் பவர்பிளேவில் பந்துவீசும் பேக்அப் பந்துவீச்சாளர்கள் பெரியளவில் இல்லை. முகேஷ் சௌத்ரி (Mukesh Choudhary) மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு தொடரிலேயே தீபக் சஹார் காயத்தால் விளையாடாதபோது முகேஷ் சௌத்ரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், ஒரு ஓவரிலேயே 27 ரன்களை கொடுத்ததால் அதன்பின் பந்துவீச ஓவரும் கொடுக்கப்படவில்லை. 

மீண்டும் ஒரு வாய்ப்பு

குறிப்பாக, சிஎஸ்கேவின் பேக்அப்பில் இருக்கும் மற்ற வீரர்களான ராஜ்வர்தன் ஹங்கரேக்கர், சிமர்ஜித் சிங் ஆகியோருக்கு சிஎஸ்கே துணிந்து வாய்ப்பளிக்குமா என தெரியவில்லை, ஆனால் நிச்சயம் மற்றொரு முறை முகேஷ் சௌத்ரிக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம். இதுகுறித்து சிஎஸ்கேவின் பந்துவீச்சு ஆலோசகரான எரிக் சைமன்ஸ் சில நாள்களுக்கு முன் கூறியிருந்தார். அதாவது, முகேஷ் சௌத்ரியும் திறன் குறித்து தங்களுக்கு சந்தேகம் ஏதுமில்லை என்றும் அவரை நாங்கள் சரியாக பயன்படுத்துவோம் என்ற வகையில் அவர் பேசியிருந்தது நினைவுக்கூரத்தக்கது. 

அடுத்த 2 போட்டிகள்...

அந்த சரியான தருணம் வந்துவிட்டது என்றே கூறலாம். சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில்தான் (Chennai Chepauk Stadium) நடைபெற உள்ளது. அதிரடியான ஹைதராபாத் அணியை (CSK vs SRH Match) ஏப். 28ஆம் தேதியும், பரிதாப நிலையில் இருக்கும் பஞ்சாப் அணி மே 1ஆம் தேதியும் சிஎஸ்கே சந்திக்க உள்ளது. வரும் மே 1ஆம் தேதி போட்டிக்கு பின்னர், முஸ்தபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) நாடு திரும்புவதால் அதற்குள் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

ரிச்சர்ட் கிலீசென் எப்போது?

இன்னும் கான்வேவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ள ரிச்சர்ட் கிலீசன் (Richard Gleeson) சிஎஸ்கே அணியில் இணையவில்லை. எனவே, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) ஆகியோரில் ஒருவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு (Sunrisers Hyderabad) எதிரான அடுத்த போட்டியில் வெளியே அமரவைக்க சிஎஸ்கே திட்டமிடலாம். அந்த இடத்தில் முகேஷ் சௌத்ரிக்கு வாய்ப்பளிக்கப்படலாம். இருப்பினும், அடுத்த போட்டி அதே ஹைதராபாத் அணிக்கு எதிராக என்பதால் சிஎஸ்கே நிர்வாகம் இந்த முடிவை எடுக்குமா என்பதும் சந்தேகம்தான். அப்படி முகேஷ் சௌத்ரியை எடுத்தால் பவர்பிளேவில் இரண்டு ஓவர்களும், மிடில் ஓவர்களில் இரண்டு ஓவர்களும் வீச வைக்கலாம். 

அதன்பின், முஸ்தபிசுர் வெளியேறும்போது கிலீசனை உள்ளே கொண்டுவரும்பட்சத்தில் டெத் ஓவர்களிலும் சிஎஸ்கேவுக்கு பிரச்னை குறையும். எனவே, அடுத்த போட்டியில் முகேஷ் சௌத்ரி யாருக்கு பதில் உள்ளே வருவார் என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. இன்னும் சிஎஸ்கே அணி மீதும் உள்ள 6 போட்டிகளில் 5இல் நிச்சயம் பெரிய நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதால் மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதையும் நாம் மறந்தவிடக் கூடாது. 

மேலும் படிக்க | இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News