ஷர்துலை கைக்கழுவும் இந்திய அணி... இந்த முக்கிய வீரருக்கும் ஓய்வு - அடுத்தடுத்த பிளான் என்ன?

India vs Australia: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த இரண்டு வீரர்களுக்கு ஓய்வளிக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 25, 2023, 01:36 PM IST
  • ஷர்துல் தாக்கூர் கடந்த 2 போட்டிகளிலும் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.
  • அக்சர் படேலின் உடற்தகுதி குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
  • இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது.
ஷர்துலை கைக்கழுவும் இந்திய அணி... இந்த முக்கிய வீரருக்கும் ஓய்வு - அடுத்தடுத்த பிளான் என்ன? title=

India vs Australia: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்று, தொடரை கைப்பற்றியது. ஆசிய கோப்பையை வென்ற அதே கையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரையும் வென்றது உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு பெரும் ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது.

தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், அந்த போட்டியில் கில், ருதுராஜ், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்து இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வழி வகுத்தனர். 

தொடர்ந்து, இந்தூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கில், ஷ்ரேயாஸ் ஆகியோர் சதம் அடித்தது மட்டுமின்றி மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 399 ரன்களை குவித்தனர். பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி, இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். 

தாக்கூர் தேவையா?

கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், கடந்த போட்டிகளில் ஓய்வில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள் என தெரிகிறது. இவர்களின் வருகை ஒருபுறம் இருக்க, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கேஎல் ராகுல் ஆகியோரும் நல்ல பார்மில் இருப்பதால் யாரை பிளேயிங் லெவனில் எடுப்பது என்ற குழப்பம் தற்போது இந்திய அணிக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

மேலும் படிக்க | விராட் கோலி இடத்திற்கே ஆப்பு வைக்கும் ஷ்ரேயாஸ்... இந்தியாவின் நம்பர் 3 இடம் யாருக்கு?

மேலும், அக்சர் படேலும் காயத்தில் இருந்து எப்போது அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. மூன்றாவது போட்டியிலும் அவர் உடற்தகுதி பெறாவிட்டால் அவரிடத்தில் அஸ்வின் விளையாடவே அதிக வாய்ப்புள்ளது. மேலும், ஷர்துல் தாக்கூர் கடந்த சில போட்டிகளாகவே பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் பெரிதாக சோபிக்கவில்லை. கடந்த இரு போட்டிகளிலும் அவர் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல், ரன்களை வாரி வழங்கினார். அவரை பிளேயிங் லெவனில் எடுப்பதற்கு பதில் இந்திய அணி, ஷமி - சிராஜ் - பும்ரா ஆகியோரை பிளேயிங் லெவனில் ஒருமுறை விளையாட வைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இரண்டு மாற்றங்கள்

இந்நிலையில், நாளை மறுதினம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் சுப்மான் கில், ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுப்மான் கில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையிலும், தொடக்க இடத்தில் இடதுகை பேட்டர் இஷான் கிஷனுக்கு மற்றொரு வாய்ப்பளிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஷர்துல் தாக்கூருக்கு பதில் அஸ்வினா அல்லது ஷமியா யாருக்கு இந்திய அணி வாய்ப்பளிக்கும் என்பது அடுத்த கேள்வியாக உள்ளது. 

IND vs AUS 3rd ODI: பிளேயிங் லெவன் (கணிப்பு)

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் (அ) ஷமி, சிராஜ், பும்ரா.

மேலும் படிக்க | அஸ்வினுக்கு எதிராக புது அவதாரம் எடுத்த வார்னர்... ஆனாலும் சனி அவர் பக்கம் தான்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News