ஆஸ்திரலியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 8ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதன் தகுதிச்சுற்று போட்டிகள் அக்.16ஆம் தேதி தொடங்கும் நிலையில், சூப்பர்-12 சுற்று அக்.22ஆம் தேதி தொடங்குகிறது.அதன் இறுதிப்போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அணிகளும் தங்களின் ஸ்குவாடை அறிவித்து வருகிறது. அதன்படி ரோஹித் தலைமையிலான இந்திய அணியும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், இந்திய அணி உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் போட்டி வரும் செப்.20ஆம் தேதி பஞ்சாபின் மொஹாலி நகரில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியோவுக்கு எதிரான தொடருக்கு பிறகு, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது.
மேலும் படிக்க | உலக கோப்பை 2022-ல் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் முழு விவரம்!
மேற்குறிப்பிட்ட தொடர்கள், உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 2 தொடர்களும் இந்தியாவிலேயே நடைபெற இருக்கிறது.
புதிய ஜெர்ஸியும் இந்திய அணியும்...
இந்நிலையில், உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் புதிய ஜெர்ஸியை இந்திய கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள ட்வீட்டில், மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், ஆடவர் அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் புதிய ஜெர்ஸியை அணிந்துகொண்டுள்ள புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ஷஃபாலி வர்மா, ஹர்திக் பாண்டியா, ரேனுகா சிங் ஆகியோரும் புதிய ஜெர்ஸியுடன் தோற்றமளிக்கின்றனர்.
To every cricket fan out there, this one’s for you.
Presenting the all new T20 Jersey - One Blue Jersey by @mpl_sport. #HarFanKiJersey#TeamIndia #MPLSports #CricketFandom pic.twitter.com/3VVro2TgTT
— BCCI (@BCCI) September 18, 2022
மேலும், இந்த புதிய ஜெர்ஸியில் டீ-சர்ட் வெளிர் நீல நிறத்திலும், அதன் கைப்பகுதி அடர் நீல நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்து. மேலும், பேன்ட் வெளிர் நீல நிறத்திலும் உள்ளது. இந்த புதிய ஜெர்ஸி உலகக்கோப்பை தொடருக்கானது என கூறப்பட்டாலும், ஆஸ்திரேலியா தொடருக்கு இரண்டு நாள்களுக்கு முன் வெளியிட்டப்பட்டுள்ளதால், இந்த தொடரிலேயே இந்த புதிய ஜெர்ஸி பயன்பாட்டிற்கு வரும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு முன்னரும் இதேபோன்று புதிய ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அந்த தொடரில் இந்திய அணி அரையிறுதிக்குக் கூட தகுதிபெறவில்லை என்பது நினைவுக்கூரத்தக்கது.
Here is the New Jersey of India. For T20 World Cup
Good jersey atleast better than last one but what is stopping them to use our flag as a part of jersey .
As a fan I would love to have that type of jersey pic.twitter.com/HrS1xiyVMm
— CricFun (@CricFunstand) September 18, 2022
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ