SRH vs CSK Playing XI Update: நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனின், 18ஆவது லீக் போட்டி தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இதுவரை இந்த தொடரில் 3 போட்டிகளில் சன்ரைசர்ஸ் 1 போட்டியிலும், சிஎஸ்கே 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 3ஆவது இடத்திலும், ஹைதராபாத் 7ஆவது இடத்திலும் உள்ளன.
இன்றைய போட்டியின் டாஸை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில் கடந்த போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். நடராஜன் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். நிதீஷ் ரெட்டி இந்த போட்டியில் அறிமுகமாகிறார். தொடக்க கட்ட பிளேயிங் லெவனில் மார்க்ரம், கிளாசென், பாட் கம்மின்ஸ் என மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து, ஹைதராபாத் தனது பேட்டிங்கின் போது டிராவிஸ் ஹெட்டை இம்பாக்ட் வீரராக கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே இன்று
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முஸ்தபிசுர் ரஹ்மான் விசா பெறுவதற்காக வங்கதேசத்திற்கு சென்றுள்ளதால் இந்த போட்டியை அவர் தவறவிட்டார். பதிரானாவுக்கு சிறிய காயம் இருப்பதால் அவரும் இன்றைய போட்டியில் சேர்க்கப்படவில்லை. சமீர் ரிஸ்வி இந்த போட்டியில் விளையாடவில்லை. அவரை இம்பாக்ட் சப் ஆக வைத்துள்ளனர். இருப்பினும், பந்துவீச்சின் போது இம்பாக்ட் வீரராக முகேஷ் சௌத்ரியை களமிறக்க வாய்ப்புள்ளது. பதிரானா, முஸ்தபிசுர் ஆகிய இரு வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களில் மொயின் அலி மற்றும் தீக்ஷனா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுழல் கைக்கொடுக்குமா?
ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, ஷாபாஸ் அகமது, மயங்க் மார்க்கண்டே என மூன்று சுழற்பந்துவீச்சு ஆப்ஷன் உள்ளது. நடராஜன், உனட்கட் ஆகிய இரண்டு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். புவனேஷ்வர் குமார், பாட் கம்மின்ஸ் ஆகியோரும் பந்துவீச்சு தாக்குதலுக்கு உள்ளதால் மொத்தம் 7 பேர் இன்று சிஎஸ்கேவுக்கு எதிராக பந்துவீசுவதை நாம் பார்க்க முடியும்.
சிஎஸ்கே அணியில் மொயின் அலி, ஜடேஜா, தீக்ஷனா என மூன்று சுழல் ஆப்ஷன்களும், முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே, தீபக் சஹார் என 6 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஹைதராபாத்தில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஷாபாஸ் அகமது என இடதுகை வீரர்கள் இருப்பதால் மொயின் அலியின் ஆப் ஸ்பின் உபயோகப்படலாம். மேலும் இதே மைதானத்தில் நடந்த மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை போன்று அதிக ரன்களை குவிக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது
Stepping into Match Mode like
Will Hyderabad witness MSD's finishing touch with the bat tonight?
Follow the Match https://t.co/O4Q3bQNgUP#TATAIPL | #SRHvCSK pic.twitter.com/sf8txGnbC0
— IndianPremierLeague (@IPL) April 5, 2024
பிளேயிங் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா மாற்று வீரர்கள் : ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சமீர் ரிஸ்வி, முகேஷ் சவுத்ரி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன் மாற்று வீரர்கள் : டிராவிஸ் ஹெட், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், க்ளென் பிலிப்ஸ், ராகுல் திரிபாதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ