INDvsAUS: முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்தி., நாளை இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?

இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்தி., அணி 277 ரன்கள் எடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2018, 06:45 PM IST
INDvsAUS: முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்தி., நாளை இந்தியா ஆதிக்கம் செலுத்துமா? title=

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. டிம் பெயின்* 16(34) மற்றும் பாட் கம்மின்ஸ்* 11(29) ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். 

இந்திய அணி சார்பில் இஷாந்த், ஹனுமா விஹாரி தலா இரண்டு விக்கெட்டும், ஜாஸ்ப்ரிட் பும்ரா, உமேஷ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் காலை ஆரம்பமாகும்.

 


82.1 வது ஓவரில் இஷாந்த் ஷர்மா பந்தில் டிராவிஸ் ஹெட் 58(80) அவுட் ஆனார். தற்போது ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட்இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

 

 


76.6 வது ஓவரில் ஹனுமா விகார் வீசிய பந்தில் ஷான் மார்ஷ் 45(98) அவுட் ஆனார். தற்போது ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட்இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

 

 


ஆஸ்திரேலியா அணி 75 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்துள்ளது.

 

 


54.1 வது ஓவரில் இஷாந்த் ஷர்மா ஓவரில் பீட்டர் ஹான்சாம்கோப் 7(16) அவுட் ஆனார். 148 ரன்னுக்கு நான்கு விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது ஆஸ்திரேலியா அணி.

 

 


ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை நிதனமாக தொடக்கி, நிலைத்து நின்று ஆடியது. முதல் விக்கெட் 112 ரன்னுக்கு தான் வீழ்ந்தது. இரண்டாவது விக்கெட் 130 ரன்னுக்கும், மூன்றாவது விக்கெட் 134 ரன்னுக்கும் வீழ்ந்தது.

 


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து, தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. 

ஆஸ்திரேலியா - இந்தியா ஒரு பார்வை:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட தொடர் நடைப்பெற்று வருகின்றது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. இந்த மைதானம் பந்துவீச்சாளருக்கு சாதகமான மைதானமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் காயம் காரணாமக ரோஹித் சர்மா, பிரித்வி ஷா மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குரிப்பிடத்தக்கது.

Trending News