AsiaCup U19: பைனலில் இந்தியா பந்துவீச்சு - இலங்கை தடுமாற்றம்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி அபாரமாக பந்துவீசி வருகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 31, 2021, 12:48 PM IST
  • 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது
  • இந்தப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன
  • டாஸ்வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி தடுமாற்றம்
AsiaCup U19: பைனலில் இந்தியா பந்துவீச்சு - இலங்கை தடுமாற்றம் title=

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி (U19 AsiaCup Final) துபாயில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ஷாய்க் ரஷீத் 90 ரன்கள் எடுத்தார்.

ALSO READ | Harbhajan vs Dhoni: தோனிக்கு எதிராக பகிரங்கமாக பொங்கும் ஹர்பஜன் சிங்! காரணம் என்ன?

244 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் மிடில் ஆர்டர் அரிபுல் இஸ்லாம் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்கள் எடுக்க, மத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். முடிவில் 140 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேசம் தோல்வியை தழுவியது. இந்திய அணி (U19 Indian Team) வெற்றிகரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, துபாயில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் விளையாடி வருகிறது.

ALSO READ | READ ALSO | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் நியூசிலாந்து வீரர்

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 17 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே எடுத்து, 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தரப்பில் ராஜ் பாவா, ரவிக்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News