2028-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்!!

Last Updated : Aug 1, 2017, 11:06 AM IST
2028-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்!! title=

2028-ம் ஆண்டிற்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடைக்காலம் மற்றும் குளிர்கால போட்டிகள் என இரண்டு முறை உலகின் மிக பாரம்பரிய விளையாட்டான ஒலிம்பிக் 2028-ம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2020-ம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டி ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறகிறது, 2024-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து பாரீஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர்களுக்கிடையே போட்டி நிலவிவந்தது. இந்நிலையில், 2024 ஆண்டிற்கான போட்டிகள் பாரீஸ் நகரிலும், 2028-ம் ஆண்டிற்கான போட்டிகள் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடக்கும் என ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

இருபினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் விரைவில் வெளியிடும் என்பது குறிப்பிடதக்கது

Trending News