முதல் டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 311/4

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவித்துள்ளது. ஜோ ரூட் அபாரமாக  விளையாடி சதம் அடித்தார். ராஜ்கோட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேடிங் செய்தது. 

Last Updated : Nov 10, 2016, 09:39 AM IST
முதல் டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 311/4 title=

ராஜ்கோட்: இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவித்துள்ளது. ஜோ ரூட் அபாரமாக  விளையாடி சதம் அடித்தார். ராஜ்கோட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேடிங் செய்தது. 

ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடிக்க, மறுமுனையில் மொயீன் அலி அரை சதம்  அடித்து அசத்தினார். இருவரும் இணைந்து 179 ரன் சேர்த்தனர். டெஸ்ட் போட்டிகளில் தனது 11வது சதத்தை பதிவு செய்த ஜோ ரூட் 124 ரன் எடுத்து (180 பந்து, 11  பவுண்டரி, 1 சிக்சர்) உமேஷ் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து  அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவித்துள்ளது (93 ஓவர்). மொயீன் அலி 99 ரன் (192 பந்து, 9 பவுண்டரி), ஸ்டோக்ஸ் 19 ரன்னுடன் களத்தில்  உள்ளனர். இன்று நடக்கும் 2வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை எட்டும் வாய்ப்பு உள்ளதால், இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

Trending News