1983 உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வைரல் போட்டோ

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ஒருநாள் போட்டிக்கான சம்பள விவரம் அடங்கிய புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 26, 2023, 12:07 AM IST
  • இந்திய அணி 1983, 2011இல் உலகக்கோப்பை வென்றது.
  • கபில் தேவ் தலைமையில் இந்திய அணி முதலில் கோப்பையை வென்றது.
  • அந்த அணி வலுவான மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தியது.
1983 உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வைரல் போட்டோ title=

1983ஆம் ஆண்டு என்பது இந்திய கிரிக்கெட்டில் மறக்க இயலாத ஆண்டாகும். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை நமக்கு வரலாற்றைப் படைத்தது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அப்போது இரண்டு முறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பை கோப்பையை அள்ளிக்கொண்டு வந்தது. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது.

அவர்கள் ஒரு பெரிய ஹீரோக்களாக இந்தியா திரும்பினார்கள். ஆனால் லார்ட்ஸில் வரலாற்று சிறப்புமிக்க இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர்களின் சம்பளத்தை உங்களால் யூகிக்க முடியுமா? இந்திய அணிக்கு ஒரு நாள் கொடுப்பனவு ரூ.200 மற்றும் ஒரு ஆட்டத்திற்கு போட்டி கட்டணமாக ரூ.1500 வழங்கப்பட்டுள்ளது. அதாவது 1983 உலகக்கோப்பை வெற்றி தான் இந்தியாவில் கிரிக்கெட் தற்போது இந்த அளவிற்கு உச்சத்தை எட்டியதற்கு காரணம் எனலாம். 

தற்போது ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர்களே பல கோடி ரூபாயில் தற்போது வருவாய் ஈட்டுகின்றனர். மேலும், போட்டிகளின்றி விளம்பரம் போன்ற பிற வழியின் மூலம் கோடிகளை குவிக்கின்றனர்.

மேலும் படிக்க | நாங்கள் முட்டாள்கள் இல்லை - சர்ஃபராஸ் கானுக்கு இதனால் தான் வாய்ப்பில்லை - பிசிசிஐ அதிகாரி

புகழ்பெற்ற பத்திரிகையாளரான மகரந்த் வைகங்கர், 1983 உலகக்கோப்பை இந்திய வீரர்களின் சம்பளத்தைப் பற்றிய படத்தைப் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தைப் பதிவேற்றிய வைகங்கர், "ஒவ்வொருவரும் ரூ. 10 கோடிக்கு தகுதியானவர்கள்" என்று எழுதினார்.

2011இல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி பண வெகுமதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் வெகுமதிகள் இரண்டையும் பெற்றது. 2011 அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பிசிசிஐ-யிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.2 கோடி வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெறாத 2003 உலகக் கோப்பை அணியும் கூட பிசிசிஐ மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மூலம் தலா ரூ.70 லட்சத்தை பெற்றிருக்கிறது. 

1983 உலகக்கோப்பையில் விளையாடி இந்திய வீரர்கள்: கபில்தேவ், கே. ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், யஷ்பால் ஷர்மா, ரோஜர் பின்னி, சயீத் கிர்மானி, பல்விந்தர் சந்து, கிர்த்தி ஆசாத், மதன் லால், ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டீல், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்கர், சுனில் வால்சன். 

மேலும் படிக்க | இரவு முழுவதும் பார்ட்டி... அடுத்த நாள் விராட் செய்த காரியம் இருக்கே - உண்மையை உடைக்கும் மூத்த வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News