கும்ப ராசியில் புதன் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை: பொதுவாக ஜோதிடத்தின் படி, சனி ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைய இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். அந்த வகையில் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கிரகம் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் கடந்த டிசம்பர் மாதம் பெயர்ச்சி அடைந்தார். தற்போது பிப்ரவரி மாதம் சுக்கிரன் மற்றும் புதன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சனியின் ராசியான கும்ப ராசியில் சனி, சுக்கிரன் மற்றும் புதன் கிரங்களின் சேர்க்கை நடக்கப் போகிறது. இந்த அபூர்வ சேர்க்கையால் தற்போது திரிகிரஹி யோகம் உருவாகப் போகிறது. இந்த திரிகிரஹி யோகம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். எனவே இந்த திரிகிரஹி யோகம் எந்த மூன்று ராசிக்காரர்களுக்கு செல்வத்தை பெருக வைத்து அதிர்ஷ்டத்தை தரும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
திரிகிரஹி யோகாத்தால் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்:
ரிஷபம் (Taurus Zodiac Sign): சனி, புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகவிருக்கும் திரிகிரஹி யோகம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். இந்த ராசிக்காரர்கள் வேலையில் பெரிய அளவில் நிர்மறையான பலன்களைப் பெறுவார்கள். அதேபோல் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கூடும். விரும்பிய இடமாற்றத்தை பெறுவீர்கள். சம்பள உயர்வு கூடும். வணிக வர்க்கம் மூலம் நல்ல நிதி லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நம்பகத்தன்மை அதிகரிக்கும். தந்தையின் முழு ஆதரவை ரிஷப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் பெறுவார்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம் (Gemini Zodiac Sign): புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகவிருக்கும் திரிகிரஹி யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகம் மற்றும் வீட்டில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தால் இந்த நேரத்தில் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளலாம். மத அல்லது மங்கள நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வியாபார ரீதியாக யோகம் சாதகமாக இருக்கும்.
கும்பம் (Aquarius Zodiac Sign): புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகவிருக்கும் திரிகிரஹி யோகம் கும்பம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தொடரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ