சனியின் வக்ர நிலையால் 3 ராசிக்காரர்களுக்கு தொழில் கொடி கட்டி பறக்கப்போகிறது

ஜூன் 17 முதல் வக்ர நிலைக்கு செல்லும் சனி, நவம்பர் வரை இந்த நிலையில் இருக்கும். பிற்போக்குத்தனமான நிலையில் கடின உழைப்பை கொடுக்கும் 3 ராசிகளுக்கு தொழில் அமோகமாகவும், பண வரவு நிறைவாகவும் இருக்கப்போகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 1, 2023, 04:32 PM IST
  • சனி பெயர்ச்சியால் யோகம்
  • வக்ர நிலைக்கு செல்லும் சனி
  • 3 ராசிகளின் தொழில் அமோகம்
சனியின் வக்ர நிலையால் 3 ராசிக்காரர்களுக்கு தொழில் கொடி கட்டி பறக்கப்போகிறது title=

ஜூன் 17 முதல் வக்ர நிலைக்கும் செல்லும் சனி, நவம்பர் 4 மதியம் 12.30 வரை இந்த நிலையில் இருப்பார். இந்த நிலையில் இருக்கும் சனி பகவான், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்க விரும்புகிறார்.  கடின உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு நிச்சயம் பண வரவு திருப்தியாக இருக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவான் யோகம் கொடுக்கப்போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எங்கோ பணம் சிக்கிக் கொண்டு இருந்தால் உங்களின் பொறுமைக்கான காலம் கனிய தொடங்கிவிட்டது. சனி பகவானின் அருளால் உங்கள் பணம் திரும்பக் கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் கடந்த சில மாதங்களாக இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது தீரும். வருமானம் அதிகரிப்பதோடு, செலவுகளும் ஓரளவு குறையும். உங்கள் செலவுகளை குறைக்க வேண்டிய நேரம் இது, சனி தேவன் தேவையற்ற செலவுகளை உடனடியாக நிறுத்துவார்.

மேலும் படிக்க | ஜூலை மாத கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பண வரவு... முழு ராசிபலன் இதோ

ரிஷபம்

ரிஷபம் என்றால் காளை. காளை போல் உழைத்தும் பலன் கிடைக்காதவர்களுக்கு சனிபகவான் வட்டியுடன் சேர்த்து பலன் தருவார். நீங்கள் வியாபாரம் செய்தால், அதை வணிகக் கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யுங்கள். மிகவும் உணர்ச்சிவசப்படுவதால் நீங்கள் பாதிக்கப்படலாம். உங்கள் வேலையை விரைவுபடுத்தி சோம்பேறித்தனத்தை விடுங்கள். அப்போதுதான் பலன்கள் கிடைக்கும். தவறை மீண்டும் செய்தால், உங்கள் இமேஜ் பாதிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அமோகமான காலம் தொடங்க இருக்கிறது. சனியின் வக்ர பெயர்ச்சி தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. அதுவும் தங்கள் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்தால் இரட்டிப்பு பலன் நிச்சயம். மருத்துவம் சம்பந்தப்பட்டவர்களுக்கு திடீர் லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். அறுவை சிகிச்சை தொடர்பான உபகரண வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் கவனம் செலுத்தவும். பழைய விஷயங்களை அதாவது பழைய பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக செகண்ட் ஹேண்ட் வாகன சந்தையுடன் தொடர்புடையவர்கள் அதிக லாபம் பெறுவார்கள்.

மேலும் படிக்க | குருவின் ஒன்பதாம் பார்வை 3 ராசிகளுக்கு மின்னல் வேக பலனைத் தரும், லாபமோ லாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News