Planet Transit 2022:செவ்வாயின் அருளால் ஜூலை 4க்குள் புதிய பணி மற்றும் பதவி உயர்வு பெறும் யோக ராசிகள்

Planet Transit 2022: ராசி மாற்றங்களுடன் செவ்வாயின் அருட்பார்வையும் சேர்ந்து 4 ராசிகளுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 11, 2022, 06:17 AM IST
  • செவ்வாயின் அருட்கடாட்சம் மேஷ ராசிக்கு சாதகமாக இருக்கும்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபொற்காலம்
  • நிலுவையில் இருந்த நல்லவை அனைத்தும் தற்போது வந்து சேரும்
Planet Transit 2022:செவ்வாயின் அருளால் ஜூலை 4க்குள் புதிய பணி மற்றும் பதவி உயர்வு பெறும் யோக ராசிகள் title=

Planet Transit 2022: ஜூன் 2022 இல் கிரகங்களின் நிலையில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்றதன் தாக்கம் 4 ராசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செவ்வாயுடன் சனியும், புதனும் இணைந்து நான்கு ராசிக்காரர்களுக்கும் அமோக வெற்றியைத் தருகின்றனர்.   

ஜூன் முதல் வாரத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன. ஜூன் 3 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசிக்கு  சென்றதுபோலவே, சனியும் தனது சொந்த வீட்டில் அமர்ந்துள்ளது.  

இந்த இரண்டு முக்கிய மாற்றங்கள் ஜூன் மாதத்தில் தொடங்கினாலும், ஜூலை முதல் வாரம் வரை இதன் உடனடித் தாக்கம் எதிரொலிக்கும். இந்த இரண்டு ராசி மாற்றங்களுடன் செவ்வாயின் அருட்பார்வையும் சேர்ந்து 4 ராசிகளுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | சனி மற்றும் புதனின் அருளால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும்

சனி மற்றும் புதனின் பரிவர்த்தனை அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் அடுத்த மாதம் வரையிலும், சனி அக்டோபர் வரை வக்ரத்திலும் இருப்பார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த இரண்டு கிரகங்களின் பலாபலன்களுடன் செவ்வாயின் பார்வையும் சேர்ந்து நான்கு கிரகங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷம் அமோகமாக இருக்கும்.  

மேஷ ராசிக்கு அபாரம்: சனி மற்றும் புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றும். இவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம்.

மாற்றத்தின் அனைத்து அம்சங்களும் வாழ்க்கையில் எதிரொலிக்கும். புதிய வீடு-வாகனம் வாங்கும் சக்தி வாய்ந்த யோகம் உருவாகும். புதிய வேலையைத் தொடங்க இந்த நேரம் சிறப்பாக இருக்கும். 

மேலும் படிக்க | சூரியன் ராசி மாற்றம்: ஜூன் 15 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும், வெற்றிகள் குவியும் 

ரிஷபம் - ரிஷப ராசியில் உள்ள புதனின் மாற்றமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். புதிய பணி கிடைக்கும் வாய்ப்பு தென்படுகிறது. வருமானம் பெருகும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

பண வரத்து அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணம் திரும்ப வரும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். பணத்தை சேமிக்கும் யோகம் உண்டு.

மிதுனம்: புதன் மற்றும் சனியின் மாற்றம் மிதுனத்திற்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. லாபம் பெருகும், வியாபாரம் விரிவடையும். 

தனுசு - புதனும் சனியும் தனுசு ராசிக்கு நன்மை தரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.  அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தவர்களுக்கு அரசுவேலை கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதான சூழல் உருவாகி வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)

மேலும் படிக்க | நிறைவான செல்வம் பெற வேண்டுமா; குபேரர் அருளை பெற செய்ய வேண்டியவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News