அந்த சனி பகவானே இவங்க பக்கம்தான்!! சனியின் செல்ல ராசிகள்.. அதிர்ஷ்டசலிகள்

Favourite Zodiac Signs of Lord Shani: ஜோதிட ரீதியாக சில ராசிக்காரர்களை சனி பகவானுக்கு கூடுதலாக பிடிக்கும். இந்த ராசிக்காரர்கள் மீது அவர் கூடுதல் அன்பை பொழிகிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 23, 2024, 03:31 PM IST
  • சனி பகவானுக்கு மிக பிடித்தமான ராசிகளில் துலாம் ராசி மிக முக்கியமானது.
  • துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன்.
  • சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள்.
அந்த சனி பகவானே இவங்க பக்கம்தான்!! சனியின் செல்ல ராசிகள்.. அதிர்ஷ்டசலிகள் title=

Favourite Zodiac Signs of Lord Shani: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப இவர் பலன்களை அளிப்பதால், நீதியின் கடவுள் என அழைகப்படுகிறார். கிரகங்களில் இவருக்கு ஒரு விசேஷ இடம் உள்ளது. சூரியனின் மகனாக இருப்பதால் இவர் ரவிபுத்திரன் என்றும் அழைக்கப்படுகிறார். இது தவிர  ஜடாதரன், ஆயுள் காரகன், மந்தன், மகேசன், தர்மாதிகாரி, என இவருக்கு பல பெயர்கள் உள்ளன.

இவர் சூரியனின் மைந்தன், எம தர்மராஜனின் சகோதரன். பொதுவாக சனி பகவான் அளிக்கும் தீய விளைவுகளால் இவரை பார்த்து பலர் அச்சப்படுவது உண்டு. ஆனால், அதற்கான அவசியமே இல்லை. நாம் செய்யும் செயல்களுக்கான விளைவுகளையே அவர் நமக்கு அளிக்கிறார். ஆகையால் நாம் நல்ல செயல்களில் ஈடுபட்டால், நமக்கு அவர் நல்ல விளைவுகளையே அளிக்கிறார். 

சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்

சனி அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால், சனியின் தாக்கமும் ராசிகளில் அதிகமாக உள்ளது. இவரது சிறிய மாற்றமும் மிகப்பஎரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி பகவானுக்கு அனைவரும் சமமே. அவர் எப்போதும் பாரபட்சம் காட்டுவதில்லை. மனிதர்களின் செயல்களுக்கான பலன்களை அவர் அளிக்கின்றார். இருப்பினும், ஜோதிட ரீதியாக சில ராசிக்காரர்களை சனி பகவானுக்கு கூடுதலாக பிடிக்கும். இந்த ராசிக்காரர்கள் மீது அவர் கூடுதல் அன்பை பொழிகிறார்.  சனி பெயர்ச்சி காலத்திலும், ஏழரை சனி காலத்திலும் சனி பகவான் இவர்களது பிரச்சனைகளை குறைத்து நல்ல பலன்களை அதிகமாக்கி அருள் பொழிகிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்கள் உழைப்பாளிகள், பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள். பொதுவாகவே, பிறருக்கு உதவுபவர்களை சனி பகவானுக்கு பிடிக்கும். அந்த வகையில்ல், மேஷ ராசிக்காரர்கள் இவரது செல்லப்பிள்ளைகள். இவர்கள் மீது சனியின் அருள் எப்போதும் இருக்கும். தங்கள் கஷ்டங்களை பொருட்படுத்தாமல் பிறருக்கு உதவும் மேஷ ராசிக்காரர்களின் பிரச்சனைகளை சனி உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார். 

மேலும் படிக்க | குரோதி ஆண்டில் ராகு கேது சஞ்சாரத்தால் யாருக்கு என்ன நன்மை? படுத்தி எடுப்பாரா கேது?

துலாம் (Libra)

சனி பகவானுக்கு மிக பிடித்தமான ராசிகளில் துலாம் ராசி மிக முக்கியமானது. துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். ஆகையால், துலாம் ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சுக்கிரனின் அருள் எப்போதும் பன்மடங்காக கிடைக்கிறது. ஏழரை சனி (Ezharai Sani) காலத்திலும் சனி பெயர்ச்சி காலங்களிலும் சனி பகவான் துலா ராசிக்காரர்களை மிக கவனமாக பார்த்துக்கொள்கிறார். தீய விளைவுகளை குறைத்தும் நல்ல விளைவுகளை பன்மடங்கு அதிகரித்தும் அவர் அருள் பொழிகிறார்.

மகரம் (Capricorn)

சனி பகவான் மகர ராசிக்கு அதிபதி. கடின உழைப்பாளிகளாக இருப்பதால் மகர ராசிக்காரர்களை சனி பகவானுக்கு எப்போதும் பிடிக்கும். இவர்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதை அவருறுதி செய்கிறார். மகர ராசிக்காரர்கள் சரியான நேரத்தில், கடினமாக உழைத்து முயற்சி செய்தால் போதும். அவர்கள் இலக்கை அடைவதை சனி பகவான் (Lord Shani) பார்த்துக்கொள்வார். 

கும்பம் (Aquarius)

பெரும்பாலும் நிதி நிலையில் வலுவாக இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் ஈகையிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள், இதன் காரணமாக சனி பகவான் அவர்களுக்கு அருள தவறுவதில்லை. கும்ப ராசிக்காரர்கள் மீது ஏழரை சனி, சனி பெயர்ச்சி (Sani Peyarchi) ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக இருக்காது. இந்த நேரங்களில் இவர்களுக்கு பிரச்சனைகளை கிள்ளியும், ஆதாயங்களை அள்ளியும் கொடுக்கிறார் சனி பகவான். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | மார்ச் மாத சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்... பண வரவு அதிகமாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News