புதன் உதயம் 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி, இயக்கம், வக்ர நிலை, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் என அனைத்து நிலைகளும் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. மே மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தில் பல பெரிய கிரகங்களின் ராசி மாற்றம், உதயம், அஸ்தமனம் ஆகியவை நடக்கவுள்ளன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
தற்போது புதன் கிரகம் மேஷ ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளது. மே 14 ஆம் தேதி புதன் மேஷ ராசியிலேயே உதயமாகும்.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, புதனின் அஸ்தமனம் சுபமாக கருதப்படுவதில்லை. மறுபுறம், புதன் உதய நிலையில் சுப பலன்களைத் தருகிறார். இம்முறை புதன் மேஷ ராசியில் உதயமாக இருப்பதால் சிலர் மீது அதிர்ஷ்டக்காற்று வீசப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் பலம், புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் பலத்தால், தொழில் மற்றும் வேலையில் நன்மைகளைப் பெறுவார்கள். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும், சமூக மரியாதையும் கூடும். புதனின் உதயத்தால் அபரிமிதமான நன்மைகளை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் உதயத்தால் ஜாக்பாட் அதிர்ஷ்டம்:
மேஷ ராசி
ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் சுப பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இவர்களின் ஆளுமை மேம்படும். திருமண வாழ்க்கை மங்களகரமாக இருக்கும். இதுமட்டுமின்றி, வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் உகந்தது. இந்த நேரத்தில் புதிய தொடர்புகள் உருவாகும், இது எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் அதிகரிக்கும். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்கள் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இந்த மாதம் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களும் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த 4 ராசிகளுக்கு ராஜ யோகம்!
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணமும் லாபமும் சேர்ந்தே வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில் சிக்கிய பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு வந்து சேரவேண்டிய தொகையும் வந்து சேரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இந்த பயணத்தால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். தொழில்-வியாபாரத்தில் மே மாதம் நேர்த்தியான நன்மைகளைத் தரும்.
சிம்ம ராசி
ஜோதிட சாஸ்திரப்படி புதன் உதயமாவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு ஏற்படும். புதன் உதய காலத்தில் குடும்பத்தில் பல சுப காரியங்கள் நடைபெறும். உங்கள் பதவியும் மரியாதையும் அதிகரிக்கும். சமூக அந்தஸ்து கிடைக்கும். பயணம் செல்லும் வாய்ப்புகள் உண்டு. இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உருவாகும். மொத்தத்தில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதம் உங்கள் உறவுகளில் சில பிரச்சனைகள் வரலாம், ஒருங்கிணைப்பு குறைபாட்டையும் காணலாம். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் இந்தக் காலத்தில் ஆதாயம் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம், நினைத்தது நடக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ