வக்ர சனியால் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு 4 மாதம் பொற்காலம்... ராஜவாழ்க்கை!!

Shani Vakri 2023: 3 ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்கள் வாழ்வில் 4 மாதங்கள் மகிழ்ச்சியும், செழுமையும் மழையாகப் பொழியப்போகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2023, 12:43 PM IST
  • இரண்டு அருமையான ராஜயோகங்கள் உருவாவதால், ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித மகிழ்ச்சிகள் வரும்.
  • உங்கள் வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாக்கப்படலாம்.
  • உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை நீங்கள் செலவிடுவீர்கள்.
வக்ர சனியால் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு 4 மாதம் பொற்காலம்... ராஜவாழ்க்கை!! title=

சனி வக்ர பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகின்றார். அவர் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் உள்ளார். மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். 

தற்போது சனி பகவான் அவரது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் ஜூன் 17, 2023 அன்று வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். அதாவது அவர் எதிர் திசையில் தன் இயக்கத்தை மாற்றுவார். பொதுவாக, சனி பகவான் வக்ர நிலையில் இருக்கும்போது, அவரது சக்தி குறைந்து, அவர் தொடர்பான வேலைகளின் வேகம் குறையும் என கூறப்படுகின்றது. சனி வக்ர நிலையில் இருக்கும்போது மக்கள் பொறுமையாகவும், தெளிந்த சிந்தனையுடனும் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதற்கு இதுவே காரணம்.

சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் இரு பெரும் ராஜயோகங்கள்:

ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த முறை சனியின் வக்ர பெயர்ச்சியின்போது, இரண்டு விசேஷங்கள் நடக்கப் போகின்றனறன. இந்த முறை 2 அற்புதமான ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி முதல் முதல் ராஜயோகம் உருவாகும். அன்றைய தினம் சனி, குரு, ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக ஒரே ராசியில் ஒன்று சேரும். அப்போது ஒரு ராஜயோகம் உருவாகும். இரண்டாவது ராஜயோகம் இந்த ஆண்டு செப்டம்பர் 26 அன்று ஏற்படும். அன்று செவ்வாய், சனி, ராகு ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடக்கும்.

தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்

இந்த இரண்டு அற்புதமான ராஜயோகங்களும் பணம், சொத்து, வாகனம், வேலை, வியாபாரத்தில் முன்னேற்றத்தின் அடிப்படையில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு இது அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்கள் வாழ்வில் 4 மாதங்கள் மகிழ்ச்சியும், செழுமையும் மழையாகப் பொழியப்போகின்றன. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையை ஆரம்பித்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள். தடைபட்ட வேலைகள் அனைத்தும் தானாக முடிவடையும். அந்த அதிர்ஷ்டக்கார 4 ராசிகள் எவை என்று இந்த பதிவில் காணலாம். 

இந்த 4 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்: 

சிம்ம ராசி:

சிம்ம ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவார்கள். நீங்கள் சொந்த வீடு கட்டி அங்கு குடிபோகும் வாய்ப்பு கிடைக்கலாம். அல்லது புதிய கடை வாங்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய துறைகளிலும் முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பார்ட்!

ரிஷப ராசி:

இரண்டு அருமையான ராஜயோகங்கள் உருவாவதால், ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித மகிழ்ச்சிகள் வரும். உங்கள் வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாக்கப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை நீங்கள் செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுன ராசி:

வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைத் தேடும் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் இலக்கைப் பெறலாம். அவர்கள் தங்கள் வியாபாரத்தை முன்னோக்கி எடுத்துச்செல்ல வேலை-வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும். இந்த வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டால் நல்ல லாபம் காணலாம். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். மூதாதையர் சொத்துக்களைப் பெறலாம். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

மேஷ ராசி

சனிபகவான் இந்த ராசிக்காரர்களால் மகிழ்ச்சியாக இருப்பார். சனி பகவானின் அனுகூலமான அருளால் மேஷ ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலைகளை மாற்ற நினைக்கும் நபர்கள் மற்ற நிறுவனங்களிடமிருந்து வேலைக்கான அழைப்பையும் ஆஃபர் லெட்டரையும் பெறுவார்கள். இவர்களுக்கு கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மிதுனத்திற்கு செல்லும் சூரியன்! ‘இந்த’ ராசிகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News