Mercury Transit Feb 27: நாலு பேர் போற்ற வாழும் ராசிகள்! புதன் பெயர்ச்சியால் நிம்மதியாகும் 4 ராசிகள்

Mercury Transit In Aquarius February 27: கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி பிப்ரவரி 27, 2023 அன்று மாலை 4:33 மணிக்கு நடைபெறும்.  கும்பத்தில் புதன் சஞ்சாரம் அனைவரின் வாழ்க்கையிலும்  பல்வேறு வகையான மாற்றங்களைக் கொண்டு வரலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 15, 2023, 10:30 AM IST
  • கும்ப ராசியில் புதன் பெயர்ச்சியால் கோடி நன்மை
  • சனி மற்றும் சூரியனுடன் கூட்டு சேரும் புதன்
  • 4 ராசிக்காரர்களுக்கு யோகமான காலம் பராக் பராக் பராக்
Mercury Transit Feb 27: நாலு பேர் போற்ற வாழும் ராசிகள்! புதன் பெயர்ச்சியால் நிம்மதியாகும் 4 ராசிகள் title=

கும்பத்தில் புதன் பெயர்ச்சி பிப்ரவரி 27: கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி பிப்ரவரி 27, 2023 அன்று மாலை 4:33 மணிக்கு நடைபெறும். இந்தப் பெயர்ச்சி, ஒவ்வொரு ராசியிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனெனில் கும்ப ராசிக்கு புதன் செல்லும்போது, சூரியனும் சனியும் ஏற்கனவே அங்கு இருப்பார்கள். மார்ச் 16, 2023 வரை கும்ப ராசியில் இருக்கும் புதன், பின்னர்  மீனத்திற்கு மாறுவார். 

கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி
கும்பத்தில் புதன் சஞ்சாரம் அனைவரின் வாழ்க்கையிலும்  பல்வேறு வகையான மாற்றங்களைக் கொண்டு வரலாம். வார்த்தைகளால் இனிமையாக இருப்பது, சொல்வதை கூர்மையாக சொல்வது, தகவல் தொடர்பு என நம்மை, இந்த உலகத்துடன் தொடர்பு கொள்ள வைக்கும் புதன் கிரகம், ஒரு நபரின் அழகு, ஆளுமை, பகுத்தறிவு, மன வலிமை என ஒருவரின் அடிப்படை குணத்தையும், ஆளுமையையும் உருவாக்குகிறது.

கும்பத்தில் புதன் சஞ்சரிக்கும்போது, ஏற்கனவே அங்கு இருக்கும் சூரியன், சனி கிரகங்களுடன் புதன் சேர்வது, அரசியல் ரீதியாகவும், மனிதர்களின் வாழ்க்கை ரீதியாகவும் பல்வேறுவிதமான பலன்களைக் கொடுக்கும்.  கும்ப ராசியில் புதன் சஞ்சாரம் உங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கம் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்.

மேஷம்
ஊடகத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு, பிப்ரவரி 27ம் நாள் நடைபெறும் புதன் பெயர்ச்சி நல்லப் பலன்களைத் தரும். உங்கள் சொந்த விருப்பத்தின்படி வேலையை தேர்வு செய்யும் வாய்ப்பும், உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும் காலமாகவும் இந்த புதன் பெயர்ச்சி மாறும்.  போட்டியாளர்களை வெல்வீர்கள். நீதிமன்ற வழக்கில் வெற்றி பெறலாம், பணம் சம்பாதிக்கும் யோகத்தையும் இந்த புதன் பெயர்ச்சி தரும்.

மேலும் படிக்க | இன்றைய ராசிப்பலன்: பண மழையில் நனையப்போகும் ராசிகள்!

ரிஷபம்
பிப்ரவரி மாதம் 27ம் தேதியன்று நடைபெறும் புதன் பெயர்ச்சியினால், நிலுவையில் இருக்கும் வேலைகள் மற்றும் நீண்ட காலமாக முடங்கியிருந்த வம்பு வழக்குகள் அனைத்தும் ஃபைசல் ஆகும். இந்த நேரத்தில் கணிசமான அளவு பணம் சம்பாதிப்பீர்கள், தொழில் மற்றும் வேலை வெற்றிகரமாக இருக்கும்.

மிதுனம்
தொழில் செய்பவர்கள்கள், தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும், பெரிய அளவிலான முன்னேற்றத்தை காண்பதற்கும் புதன் பெயர்ச்சி வழிகாட்டும். புதிய யோசனைகளை செயல்படுத்தும் நேரம் இது. வேலையில் வெற்றியைத் தரும் புதன் பெயர்ச்சி, உங்களின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்துவார்.  

கும்பம்
திருமணமான தம்பதிகளுக்கு இது ஒரு அற்புதமான நேரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களை உருவாக்கி, அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என ஆலோசிக்க உகந்த நேரம் இது. மாணவர்களின் புத்திசாலித்தனமும் ஞானமும் வளரும், பெரிய சாதனைகளைச் செய்யும் காலம் இது. இளைஞர்களுக்கு காதல் மலரும் காதல் இது.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதிசை! ராஜ போக வாழ்க்கை அமையும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News