சூரியன்-சனி சேர்க்கை: அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Sun Saturn Conjunction: சூரியன் சனி கிரக சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2023, 11:41 AM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
  • ரிஷப ராசிக்காரர்களின் உறவினர்கள், நண்பர்களுடன் உறவுநிலை மேம்படும்.
  • கும்பம் ராசிக்காரர்களுக்கு அரசு வேலைகள் ஏதேனும் தடைபட்டிருந்தால், அது இப்போது நிறைவேறும்.
சூரியன்-சனி சேர்க்கை: அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள் title=

சூரியன் சனி சேர்க்கை: சனி பகவான் மார்ச் மாதம் 6 ஆம் தேதி உதயமாகவுள்ளார். தற்போது சனி கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். பிப்ரவரி 13 அன்று, சூரியன், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். இதன் காரணமாக இந்த ராசியில் தந்தை மற்றும் மகன் கூட்டணி உருவாகும். இந்த காலகட்டத்தில், அஸ்தமன நிலையில் இருக்கும் சனி பகவானின் ஆற்றல் குறையும், சூரியபகவானின் ஆற்றல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அடுத்த 30 நாட்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இந்த கிரக சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாக இருக்கும். ரத்த அழுத்தம், மூட்டு, நரம்பு சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். இவ்வளவு நாட்களாக இருந்துவந்த வயிறு தொடர்பான பிரச்சனைகளும் உங்களைத் தொந்தரவு செய்யாது. வெளிநாட்டில் ஏதாவது வேலை சிக்கியிருந்தாலோ அல்லது விசா-பாஸ்போர்ட்டில் பிரச்னை ஏற்பட்டு இருந்தாலோ, அவையும் தற்போது சரியாகும். 

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களின் உறவினர்கள், நண்பர்களுடன் உறவுநிலை மேம்படும். காதல் வாழ்க்கையும் மேம்படும். இதனுடன் வாழ்க்கைத் துணையுடனான உறவும் வலுவாக இருக்கும். நிதி பிரச்சனைகளும் நீங்கும். மற்றவர்களுடனான உங்களுடைய தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் தாயாரின் உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: 

நீங்கள் சந்தித்து வந்த அனைத்து பிரச்சனைகள் அல்லது துக்கங்களிலிருந்து அடுத்த 30 நாட்களுக்கு உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். நல்ல செய்திகளும் கிடைக்கும். எதிரிகள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் பிளவு ஏற்பட்டிருந்தால், இந்த நேரத்தில் அவர்களுடனான உறவுகள் மேம்படும்.

மேலும் படிக்க | நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்! பணமழையில் நனையலாம்

துலாம்: 

இந்த காலகட்டம் உங்களின் நிதி நிலையை பலப்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு நீண்ட கால பலன்களை தரும். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால் அதுவும் இப்போது உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக நடந்து வந்த விவாதங்களும் முடிவுக்கு வரும். முதலீடு செய்வதற்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது. இப்போது செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும்.

விருச்சிகம்: 

தற்போது விருச்சிக ராசிக்காரர்கள் சனி தசையின் தாக்கத்தில் உள்ளார்கள். இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும், அடுத்த ஒரு மாதத்திற்கு நீங்கள் அதிலிருந்து விடுபட வாய்ப்பு கிடைக்கும். பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அனைத்து விதமான வியாபாரமும் உங்களுக்கு லாபத்தைத் தரும். தந்தை மற்றும் தாய் மாமன் ஆகியோரின் ஆதரவைப் பெறுவீர்கள். தந்தை உங்களுக்கு பண உதவி செய்வார்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு அரசு வேலைகள் ஏதேனும் தடைபட்டிருந்தால், அது இப்போது நிறைவேறும். பில்டர், ஜிம், ஸ்டீல் அல்லது இரும்பு வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள், அடுத்த 30 நாட்களுக்கு பலன் பெறுவார்கள். பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும். இரண்டு விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதலில் சனிக்கிழமை தோறும் சனி பகவானின் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்! இந்த 4 ராசிக்கார்கள் ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News