துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் புதனுக்கான பரிகாரங்கள்! புத்தியைக் கொடுப்பார் புதன்

Mercury Transit Today: இன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். சூரிய கிரகணத்திற்கு பிறகு நடைபெறும் இந்த பெயர்ச்சியில், புத்திக் காரகரான புதனின் நல் ஆசியைப் பெற செய்ய வேண்டிய எளிய மற்றும் சுலபமான பரிகாரங்கள்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 26, 2022, 07:39 AM IST
  • புத்திக் காரகரான புதனின் நல் ஆசியைப் பெற பரிகாரங்கள்
  • துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் புதனின் தாக்கம்
  • சூரிய கிரகணத்திற்கு பிறகு நடைபெறும் புதன் பெயர்ச்சி
துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் புதனுக்கான பரிகாரங்கள்! புத்தியைக் கொடுப்பார் புதன் title=

Mercury Transit Today: இன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். சூரிய கிரகணத்திற்கு பிறகு நடைபெறும் இந்த பெயர்ச்சியில், புத்திக் காரகரான புதனின் நல் ஆசியைப் பெற செய்ய வேண்டிய எளிய மற்றும் சுலபமான பரிகாரங்கள்... இது துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு ராசிகளுக்கான பொதுப் பலன்களும் பரிகாரங்களும்....  

துலாம்: துலாம் ராசியின் ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வீடுகளுக்கு அதிபதியாக இருக்கும் புதன் கிரகம், இப்போது உங்கள் லக்னத்தில், சொந்த ராசியில் இருப்பார். புதனின் தற்போதைய சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு கலவையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் பன்னிரண்டாம் வீடு செலவுகளுடன் தொடர்புடையது, ஒன்பதாம் வீடு அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. புதனின் இந்த சஞ்சாரத்தில் உங்களும் பண வரவும் உண்டு, அதற்கேற்ற செலவுகளும் உண்டும். பணத்தை சேமிக்க முடியாது. இதற்கு பரிகாரம் அன்னையை வழிபடுவது தான்.

பரிகாரம்: துர்க்கை அன்னையை வழிபடுவதும், ஸ்தோத்திரங்கள் சொல்வதும் பண விரயத்தைத் தடுத்து, நிம்மதி தரும். 

மேலும் படிக்க | சனீஸ்வரரால் பிரச்சனை முடிந்தாலும் சிக்கலைக் கொடுக்க தயாராகிவிட்டார் புதன்

விருச்சிகம்: விருச்சிக ராசியில் எட்டு மற்றும் பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபதி புதன். புதனின் பெயர்ச்சி இப்போது உங்கள் ராசியின் பன்னிரண்டாவது வீட்டில் நிகழும், இது செலவு, இழப்பு, என கஷ்டங்களை ஏற்படுத்தும். மனதில் வருத்தங்கள் ஏர்படும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளவும். துலாம் ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் நிம்மதி குலையும். 

பரிகாரம்: திருநங்கைகளுக்கு பச்சை நிற ஆடைகளை தானம் செய்யுங்கள். அன்னதானம் செய்வதும் நல்லது.

தனுசு: தனுசு ராசியில் ஏழு மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதி புதன். உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் புதன் பெயர்கிறார். லாபம், ஆசை நிறைவேறுதல் போன்றவற்றின் பதினோறாம் வீட்டில் புதன் சஞ்சரிக்கும் காலத்தில் , சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் தொழிலில் உங்கள் அர்ப்பணிப்பு, பணி செயல்திறனை மேம்படுத்தும். இதனால் சக ஊழியர்கள் அல்லது அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்த்ராநாம் ஸ்தோத்திரத்தை ஜபிப்பது மகிழ்ச்சியைக் கூட்டிக் கொடுக்கும்.

மேலும் படிக்க | சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள்

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு ஆறு மற்றும் ஒன்பதாம் வீடுகளுக்கு அதிபதி புதன்.  உழைப்பு, தொழில், பதவி, புகழ் ஆகியவற்றை உங்களுக்கு வழங்குவார் புதன். இந்த புதன் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் விநாயகப் பெருமானை வணங்கி, துர்க்கைக்கு காணிக்கை செலுத்தவும்.

கும்பம்: புதன் பெயர்ச்சி கும்ப ராசியின் ஒன்பதாம் வீட்டில் நடக்கும். மறுபுறம், புதன் உங்கள் ஐந்தாம் மற்றும் எட்டாம் வீடுகளுக்கு அதிபதி. வாழ்க்கையில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக, பெரும்பாலான திருமணமான தம்பதிகள் தங்கள் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். புதனின் தாக்கம் உங்கள் பிள்ளைகளுக்கு விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: புதன் கிரகத்தின் பீஜ மந்திரத்தை புதன் ஹோரையில் 108 முறை உச்சரிப்பது நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | சூரிய கிரகணம் 2022: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும் 

மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு நான்காம் மற்றும் ஏழாவது வீடுகளை புதன் ஆட்சி செய்கிறது. துலாம் ராசியில் புதன் சஞ்சாரத்தின் போது அவர்கள் உங்கள் ராசியிலிருந்து எட்டாவது வீட்டிற்குச் செல்கிறார். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அவர்களின் உடல்நிலையை கவனித்து, தேவைப்பட்டால் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

பரிகாரம்: ஏழை மாணவர்களுக்கு கல்விப் பொருட்களை தானம் செய்வது உங்களுக்கு நற்பலன் தரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி! துலாம் ராசிக்கு சஞ்சரிக்கும் புதனை இந்த பரிகாரங்கள் சாந்திப்படுத்தும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News