புத்தாண்டு தொடக்கிய சில நாட்களிலேயே ஆண்டின் முதல் மிருத்யு பஞ்சக் இன்று (2024 ஜனவரி 13) இரவு முதல் தொடங்குகிறது. மிருத்யு பஞ்சக நாட்கள் மிகவும் அசுபமானதாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, இந்த 5 நாட்கள் மிகவும் அசுபமானது. மிருத்யு பஞ்சகம் இருக்கும் நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடவுளின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
ஜோதிடத்தின் படி, மிருத்யு பஞ்சகம் அதன் பெயருக்கு ஏற்ப செயல்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், ஜனவரி 13 ஆம் தேதி இரவு முதல் பஞ்சக் தொடங்கும். இரவு 11:35 மணி முதல் மிருத்யு பஞ்சகம் தொடங்கும். எனவே அடுத்த 5 நாட்களுக்கும் எந்தவொரு சுப காரியங்களையும் தொடங்க வேண்டாம்.
மிருத்யு பஞ்சக் 13 ஜனவரி 2024 அன்று இரவு 11:35 மணிக்கு தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு அதாவது 18 ஜனவரி 2024 வரை நீடிக்கும். ஜனவரி 18 அதிகாலை 3:33 மணிக்கு மிருத்யு பஞ்சகம் முடிவடையும். இதற்குப் பிறகு நீங்கள் எந்த சுப மற்றும் மங்களகரமான வேலைகளையும் செய்யலாம்.
மேலும் படிக்க | 30 ஆண்டுக்குப் பின் சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு பண மழை, பொற்காலம்
மிருத்யு பஞ்சக்
இந்த தீய நேரத்தின் ஆரம்பமும் முடிவும் சந்திரனின் நிலையால் தீர்மானிக்கப்படுகிறது. சந்திரன் தனது ராசியை மாற்றும் போது இந்த காலம் வரும். சந்திரன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறும் போது, ஒவ்வொரு 27 நாட்களுக்குப் பிறகும் இந்த நிகழ்வு நிகழ்கிறது. இந்த நேரம் மங்களகரமான வேலைகளைச் செய்வதற்கு சாதகமற்றதாகக் கருதப்படுகிறது. இவற்றில் எந்த ஒரு சுப காரியம் செய்தாலும் எதிர்மறையான தாக்கம் அல்லது காரியத்தடை ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.
மிருத்யு பஞ்சகத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
சனிக்கிழமையிலிருந்து தொடங்கும் பஞ்சகம் மிருத்யு பஞ்சாக கருதப்படுகிறது. இது சாதகமற்றது. மிருத்யு பஞ்சகத்தின் போது தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது ஒரு நபரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் தொந்தரவு செய்கிறது.
மிருத்யு பஞ்சாக்கின் போது, விபத்து அல்லது துரதிர்ஷ்டத்தை சந்திக்க வேண்டும். இது மிகவும் கடினமான நேரம். மிருத்யு பஞ்சகத்தின் போது, தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்க வேண்டும். கட்டுமானப் பணிகளை மேற்கொள்பவர்கள், கூரையில் அதாவது மேல் தளம் அமைக்கும் வேலையை தவிர்ப்பது நல்லது.
மிருத்யு பஞ்சகத்திலோ ஒருவர் இறந்தால் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. மரணம் இல்லாவிட்டாலும், குடும்பத்தில் உள்ள மற்ற 5 உறுப்பினர்களுக்கு ஏதேனும் பெரிய பிரச்சனையோ, துன்பமோ, ஏற்படலாம் என்று அஞ்சுகின்றனர்.
எனவே, இந்த மிருத்யு பஞ்சக நாட்களில், இறைவழிபாடும், நல்ல சிந்தனையும் இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லாமல் கெட்ட காலத்தைக் கடந்துவிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் காலம்.... மகிழ்ச்சி மழையில் நனைவார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ