ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகத்தால் மகிழும் அபிஷேகப் பிரியர் சிவபெருமான்

Annabhishekam Rituals: அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்வதை காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற பழமொழிக்கு மூலக்காரணமும் இதுதான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2022, 02:59 PM IST
  • அன்னாபிஷேகம் செய்யப்படும் உணவை தயிரோ அல்லது வெண்ணெயோ கலந்துதான் சாப்பிட வேண்டும்
  • அன்னாபிஷேக வைபவத்தை தரிசித்தால் வாழ்வில் உணவுக்கு பஞ்சமில்லை
  • அன்னத்தின் வடிவில் உயிரளிக்கும் இறைவனுக்கு நன்றிக்கடனாக அன்னாபிஷேகம்
ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகத்தால் மகிழும் அபிஷேகப் பிரியர் சிவபெருமான் title=

ஐப்பசி அன்னாபிஷேகம்: அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்வதை காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற பழமொழிக்கு மூலக்காரணமும் இதுதான். மனிதர்கள் பல்வேறு தான தருமங்களைச் செய்தாலும், அவற்றில் தலையாய தானம், அன்னதானம் தான்.  "உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர்" என இலக்கியங்களும் போற்றுவது அன்னதானத்தையே. அன்னத்தை தானமாக செய்வது ஒருவகையில் புண்ணியம் என்றால், அபிஷேகப் பிரியரான இறைவன் சிவனுக்கு, அன்னத்தால் அபிஷேகம் செய்வது, பிறவா வரம் அளிக்கும்.

ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை காட்டிலும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.  ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தன்று தான், சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார்.

ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதம் இருந்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரும்பிய மணவாழ்க்கை அமையும். திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் புத்திர பாக்கியமும், கணவனுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

மேலும் படிக்க | யம்மாடி....இத்தனை கோடி சொத்து இருக்கா திருப்பதி கோவிலுக்கு

அதுமட்டுமல்ல, சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் நடத்துவது சிறப்பு.

ஆலயங்களில், கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் அன்னாபிஷேக வழிபாடு சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்; பண இழப்பை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!

சமைத்த அன்னத்தை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை பார்த்தால் ஏழேழு பிறவிக்கும், நமக்கு உணவிற்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்பது ஐதீகம். 

அன்னாபிஷேகத்தை கண்டு வணங்கிச் செல்ல இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.

சாஸ்திரத்திரங்களின்படி, ஐப்பசி மாத பௌர்ணமியன்று நிலவு அதிகப் பொலிவுடன் இருக்கும். சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி. அதனால் சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | அன்ன தோஷம் படுத்தும் பாடுகளும், பரிகாரமும்!

அன்னதோஷத்தாலும் அன்ன துவேஷத்தலும் பீடிக்கப்பட்டவர்கள், சிவனுக்கு பக்தியுடன் அன்னாபிஷேகம் செய்தால் முக்தியடையலாம். வடித்து சற்றே ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள்

சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யும்போது, வடித்து சற்றே ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். 

அன்னாபிஷேகம் செய்யப்படும் உணவை அப்படியே உண்ணக்கூடாது. தயிரோ அல்லது வெண்ணெயோ கலந்துதான் சாப்பிட வேண்டும். அன்னாபிஷேக வைபவத்தை தரிசித்தால், வாழ்வில் உணவுப் பஞ்சமே ஏற்படாது. எந்தவித தோஷங்களும் நெருங்காது.

மேலும் படிக்க | சுக்கிரனின் அருளால் இந்த ராசிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம், தொட்டது துலங்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News