இவர்கள் வாழ்வில் குழப்பம் ஏற்படும்; ராகு செவ்வாய் சேர்க்கையால் நஷ்டம் ஏற்படும்

Mars Transit 2022: செவ்வாய் மற்றும் ராகு இரண்டும் மிகவும் முக்கிய கிரகங்கள் ஆகும். செவ்வாய்-ராகு இணைவது 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 24, 2022, 06:20 AM IST
  • ராகு செவ்வாய் சேர்க்கை
  • செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கையின் தாக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்
  • அங்காரக யோகம் கடுமையாக இருக்கும்
இவர்கள் வாழ்வில் குழப்பம் ஏற்படும்; ராகு செவ்வாய் சேர்க்கையால் நஷ்டம் ஏற்படும் title=

ஜோதிடத்தில், கிரகப் பெயர்ச்சி, கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் தவிர, கிரக சேர்க்கையின் பலன்களும் சொல்லப்பட்டுள்ளன. கிரகங்களின் சேர்க்கை பல சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறது. இந்த யோகங்கள் ராசி அறிகுறிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இம்முறை செவ்வாய் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் இணையவுள்ளன. மிகவும் ஆதிக்கம் செலுத்தும் செவ்வாய் கிரகத்தின் நிழல் ராகு கிரகத்துடன் அங்காரக யோகத்தை உருவாக்கும். இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையாக மாறும். இங்கு ஏற்கனவே ராகு இருப்பதால் ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசியில் பிரவேசித்த பிறகு அங்காரக யோகம் உருவாகும்.

இவர்களுக்கு அங்காரக யோகம் கடுமையாக இருக்கும்
அக்கினி ஆதிக்க கிரகமான செவ்வாய் பாவ கிரகமான ராகுவுடன் சேர்வதால் 3 ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்காது. இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் - ராகு இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் இன்னல்களை தரும். எனவே யார் அந்த மூன்று ராசிக்காரர்கள் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க | செவ்வாய் ராசி மாற்றம்: ஜூன் 27 முதல் இந்த ராசிகள் மீது பண மழை, தொட்டது துலங்கும் 

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய்-ராகு இணைவு நல்லதல்ல. அது அவர்களின் பாக்கெட்டை பாதிக்கும். செலவுகள் அதிகரிக்கும், இது பட்ஜெட்டை கெடுக்கும். அதே சமயம் உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே யாரிடமும் கசப்பாக பேசாமல் இந்த நேரத்தை நிம்மதியாக செலவிடுங்கள். இந்த நேரத்தில் வணிகர்கள் பெரிய ஒப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும். எதிரிகளால் பாதிப்பு ஏற்படலாம்.

சிம்மம்: அங்காரக யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும். செய்யும் எந்த வேலையும் தவறாக முடியும். தொலைதூர பயண திட்டங்களை ரத்து செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகளின் பெரிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படலாம். வாகனத்தை கவனமாக  ஓட்டவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

துலாம்: செவ்வாய்-ராகு இணைவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் பேசும் முன் யோசித்து பேசவும். இல்லையெனில் சண்டையில் மாட்டிக்கொள்ளலாம். பணியிடத்தில் சக ஊழியர்கள் உங்களை ஆதரிக்க மாட்டார்கள்.

எந்த ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும்

மிதுனம் - உங்கள் கௌரவம் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு சாத்தியமாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம் - கடகம் ராசிக்காரர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். சமய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்- இந்த ராசிக்காரர்களுக்கு ரகசிய எதிரிகள் மீது வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஆதாயம் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். கட்டிடம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Lakshmi Narayana Yogam: லக்ஷ்மி நாராயண யோகத்தினால் காதலில் செல்வாக்கு பெறுபவர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News